“பெயர், புகழ், பதவி உயர்வு, காதல் திருமண யோகம்.. மீன ராசியினருக்கு அடுத்தடுத்து குவியும் அதிர்ஷ்டம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், மீன ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    மீனம் ராசி பலன்

    மீன ராசி பெண்களுக்கு 5 ஆம் இடம் வலுவாக இருப்பதால் பெயர், புகழ் கிடைக்கும் அற்புதமான காலகட்டம். நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். புதிய வேலைகள், வாய்ப்புகள் வந்து சேரும். நிறைய பணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். தொழில் செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது, கிளை அமைப்பது போன்ற யோகங்கள் உண்டாகும்.

    Advertisement

    மன அழுத்தம் தீரும்

    முதலீடு செய்வதற்கு நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த மன அழுத்தங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு சரியாகும். வேலை போகும் என்ற நிலைமைகள் எல்லாம் மாறும். புதிய வேலைகளுக்கு முயற்சித்தால் அடுத்த மாதம் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

    முன்னேற்றம்

    வேலைவாய்ப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையை இனிமையாக கழிக்கத் தொடங்குவீர்கள். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இப்போது தான் உங்கள் ரிலேசன்ஷிப் அற்புதமாக இருக்கும். கணவன், மனைவி இருவருமே ஒற்றுமையாகவும், உறுதுணையாகவும் இருப்பீர்கள்.

    Advertisement

    காதல் திருமணம்

    காதலிப்பவர்களுக்கு காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். காதல் திருமணத்திற்கான யோகம் உண்டாகும். இரண்டாம் வருமானத்திற்கான விஷயங்களைச் செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பேர் அரசியலில் இறங்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஏற்றுமதி தொழில், தண்ணீர் தொழில், இயற்கையையொட்டி தொழிலில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    கண் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உங்களுக்கு கைகொடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றங்களையும் தரும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விநாயகர் வழிபாடு செய்வது, விநாயகர் அகவல் படிப்பது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Meenam (pisces) sign during the month of August.