மேஷ ராசிக்கு அடுத்தடுத்து ஏற்றம்.. இந்த வாரம் நடக்கப் போகும் மேஜிக்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு அற்புதமான வாரமாக இருக்கும். முதலீடுகள் செய்வதைத் திட்டமிடுவீர்கள். வயிறு சார்ந்த பாதிப்புகள் வந்து போகும். வீடு கட்டுவது, பிளாட் வாங்குவது, புதிய வீட்டிற்கு குடிபெயர்வது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள்.

    Advertisement

    வாக்குவாதம் வேண்டாம்

    மன அழுத்தம், பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சுக்கிரன வலுவிழந்து இருப்பதால் மற்றவர்கள் உங்களைப் பற்றி காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். யாரிடமும் கோபப்படாமல், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.

    ஆரோக்கியம்

    வயிறு, தோள் பட்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. நரசிம்மர் கவசம் கேட்பது, அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை. உங்களை மிகவும் வருத்திக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது ஏற்றத்தைத் தரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட பயணங்கள் ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    வழிபாடு

    நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலரால் பாராட்டப்படும். மனைவி, கணவன் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையையும் சந்தோஷத்தையும் தரும். அறிவு சார்ந்த சுற்றுலா சென்று வரும் அமைப்பு உள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Mesham rasi people during this week of August 17 to 23.