மேஷ ராசிக்கு நன்மைகளை அள்ளித் தரும் கிரகங்கள்.. இந்த விஷயங்களில் அதீத கவனம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று ஆடிகிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது திருமணப் பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், மேஷ ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசி பெண்களுக்கு குடும்பம் சார்ந்து இருந்து வந்த பிரச்சனைகளை தனி ஆளாக சமாளித்து வந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் மாறும். ஆகஸ்ட் மாதத்தில் நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். மனதில் சந்தோஷம் ஏற்படும். அம்மா வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் தாய் வழி சொத்துகள் கைக்கு வந்து சேரும். மனதை சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்து மகிழ்வீர்கள்.

    Advertisement

    சொத்து சேர்க்கை

    உங்களை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செலவு செய்வீர்கள். வெளியில் இருந்து வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். முதலீடுகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். நிலம், வீடு, இடம் என சொத்து சேர்க்கையில் ஈடுபடுவீர்கள்.

    காதலில் கவனம்

    உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம். தாய் வழி சொத்து வாங்கும் உண்டாகும். நகை வாங்கும் யோகம் ஏற்படும். முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். கடன் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். சுக்கிரன் நீசமாக இருப்பதாலும், சனி பகவான் சுக்கிரனைப் பார்ப்பதாலும் கடன் அமைப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. காதல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    திருமண பேச்சுவார்த்தை

    சுக்கிரன் வலுவிழந்து இருப்பதால் திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நடத்த, முடிவுகள் எடுக்க உகந்த மாதம் இல்லை. இந்த மாதத்தில் வரன்கள் அமைந்தாலும் செப்டம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வது நல்லது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நண்பர்கள், உறவுகள் போன்றவற்றை எதிர்பாலினத்தவரிடம் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

    வழிபாடு

    புதன் அல்லது சனிக்கிழமைகளில் பெருமாள், தாயார் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். தாமரை அல்லது துளசியைக் கொடுத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்வது நன்மை பயக்கும். தெருநாய்களுக்கு தானம் அளிப்பது ஏற்றத்தைத் தரும். மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. பச்சை, வெள்ளை நிறத்தை தவிர்ப்பது நல்லது. 10க்கு 8 மதிப்பெண்கள் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Mesham (Aries) sign during the month of August.