Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம்


  • ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

    Advertisement

    இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.

    தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம்

    மிதுனம் ராசியினருக்கு மாற்றம் மிகுந்த முன்னேற்றமான மாதமாக இருக்கும். 3 வாரத்திற்கு புதன் ராசியிலேயே ஆட்சியாக இருக்கிறார். மாதத்தின் ஆரம்பத்திலேயே குருப்பெயர்ச்சி நடந்துள்ளதால் 2 ஆம் இடத்திற்கு குரு பகவான் வந்துள்ளதால் தர்மகா்மாதிபதி யோகம் உண்டாகிறது. 9 ஆம் அதிபதி, 10 ஆம் அதிபதி பார்க்கும் அமைப்பு உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் 11 ஆம் இடத்தில் செவ்வாய் என அற்புதமான கிரக அமைப்புகள் உள்ளன.

    யோக பலன்

    11 இல் செவ்வாய், 12 இல் சூரியன், ராசியில் புதன், 2 ஆம் இடத்தில் குரு சுக்கிரன், 10 ஆம் இடத்தில் சனி என வியாபாரம், தொழில், விவசாயம், வேலை, சொந்த வாழ்க்கை என அனைத்து அமைப்புகளிலும் யோக பலன்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. பெரிய அளவில் நல்ல மாற்றம், முன்னேற்றங்கள் ஏற்படும். எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எடுத்த காரியங்களை தைரியமாக நடத்தி முடிப்பீர்கள்.

    Advertisement

    வருமானம்

    புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துவீர்கள். கணிதம், கணக்கு வழக்கு, அக்கவுண்ட்ஸ், சாப்ட்வேர் விஷயங்களில் ஈடுபாடோடு இருப்பவர்களுக்கு அதுசார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பங்குச்சந்தை, யூக வணிகத்தில் நல்ல லாபங்கள், வருமானம் கிடைக்கும். வராத பணங்கள் வந்து சேரும். இழந்த பணத்தை மீண்டும் மீட்டெடுப்பீர்கள். நல்ல ஆரம்பங்கள் ஏற்படும் காலகட்டம். ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல ஆரம்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

    பிரச்சனை தீரும்

    சகோதர சகோதரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள், மன அழுத்தங்கள் தீரும். அவர்கள் உங்களுக்கை கைகொடுக்கும் காலகட்டமாக இருக்கும். உற்சாகமாக வேலை செய்யக்கூடிய, தொழில், வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். கணவன், அண்ணன், குழந்தைகள் என ஆண்களால் இருந்து வந்த அனைத்து நிர்ப்பந்தங்கள், நெருக்கடிகள் நீங்கும் காலகட்டம். பெரிய அளவில் நன்மைகளும், முன்னேற்றங்களும் ஏற்படும் நல்ல காலகட்டம்.

    English Summary

    Mithunam June Month Rasi Palan: In this post, we will explore the benefits, remedial measures, career advancement, financial progress, marriage prospects, and deities to be worshipped for individuals born under the Mithunam zodiac sign during the month of June 2026.