அதிர்ஷ்டத்தை அள்ளும் மிதுன ராசி.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ்.. ஒரு விஷயத்தில் கவனம்


  • Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் தெளிவு பிறக்கும். நினைத்த விஷயங்கள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நல்ல விஷயங்கள் ஏராளமாக நடக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது வெற்றியைத் தரும். வீடு மாற்றம், இடமாற்றம், வீடு விற்பது, நிலம் விற்பது, நிலம் மாற்றம் போன்ற அமைப்புகள் இந்த வார இறுதிக்குள் முடியும்.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொண்டை வலி, தொண்டை எரிச்சல், கழுத்து வலி, கைகளில் சுழுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது கவனம் தேவை. போனில் பேசும்போது, வண்டி வாகனங்களில் கவனம் தேவை. தன குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும்.

    கடன் தீரும்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய யோகம் உண்டு. நரம்பு, கண், தலைவலி போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    தொழில்

    புதிய தொழில் கிடைத்தால் மாற்றிக் கொள்வது நல்லது. மற்றவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது. குறைவான சம்பளம் கிடைத்தாலும் நிம்மதியாக இருக்கும் என்றால் உடனடியாக உத்தியோகத்தை மாற்றிக் கொள்வது நல்லது. உங்களுடைய தொழில், வேலைகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வது நல்லது. கொஞ்சம் சுயநலமாக நடந்து கொள்வது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    வழிபாடு

    நல்ல மாற்றங்கள், ஏராளமான சந்தோஷங்கள் காணப்படும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். சனியின் நிலை வேலையில் ஒரு நிரந்தரத் தன்மையை ஏற்படுத்தும். வேலையில் முக்கியமான விஷயங்கள் தள்ளிப்போனாலும் எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது, ஒரு விதமான எண்ணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். கல்யாண சுந்தரேஷர், ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Mithunam (மிதுனம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Gemini (Mithunam) sign during this week, from July 6 to 12.