மிதுன ராசிக்கு அடிச்சது யோகம்.. வேலை, பணம், பதவி என அடுத்தடுத்து குவியும் அதிர்ஷ்டம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு மன அழுத்தம் தீரும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிரிகள் தொர்பான பாதிப்புகள் நீங்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    பயணங்களில் வெற்றிகள் காணப்படும். பைலட் ஆவதற்கான வாய்ப்பு, அதுதொடர்பான கோர்ஸ் படிப்பது, அறிவியல் அறிஞர்களாகும் வாய்ப்பு ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். கையிருப்பு பணம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். எல்லா விஷயங்களும் எளிமையாகவும், உங்களுக்கு சாதகமாகவும் நடக்கும்.

    யோகம்

    இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும்.

    Advertisement

    80 சதவீதம்

    4 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளதால் சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. பவர்புல் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வங்கிகளில் லோன் கிடைக்கும். வீட்டில் புதிய மாற்றங்கள் செய்வது, புதிய பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும்.

    புரோமோஷன்

    பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல வித நன்மைகள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மைகளை ஏற்படுத்தம். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கழிவுப் பாதை, அடிவயிறு, அசிடிட்டி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the mithunam rasi people during this week of August 24 to 30.