அடித்தாடும் மிதுன ராசி.. சுக்கிரனின் அருளால் பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்


  • Mithunam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

    அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)

    மிதுன ராசிக்காரர்கள் உறவினர்களிடம் வாக்குவாதம், பிரச்சனைகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். மன அழுத்தம் தீரும். மகிழ்ச்சியான பயணங்கள், ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

    பிரச்சனைகள் நீங்கும்

    மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்திலும் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக ஏற்றங்கள் காணப்படும். கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிளளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும்.

    Advertisement

    வெற்றி மேல் வெற்றி

    புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உறவுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். காதல் கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிரச்சனையாக இருந்த விஷயங்கள் எல்லாம் சரியாகும்.

    ஆரோக்கியம்

    ஆவணங்கள் தொடர்பான விஷயங்கள் நன்றாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய படிப்பு, முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முதுகு வலி, இடுப்பு வலி, கண் வலி தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மன உறுதி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சுக்கிரனின் அருள் இருப்பதால் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது.

    Advertisement

    அதிர்ஷ்டம்

    நிறைய பேருக்கு திருமண யோகம் உண்டாகும். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். நிலம், இடம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். அலர்ஜி, சளி தொந்தரவு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

    English Summary

    Mithunam Rasi Palan: Let us take a detailed look at the weekly predictions and remedial measures for the Gemini zodiac sign for the period spanning May 25th to May 31st (Vaikasi 11th to 18th). In this astrological article, you will discover how this week is likely to unfold, the specific outcomes you can expect, and the deities you should worship.