சென்னை: வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பலராலும் விரும்பப்படும் ஒரு செடிதான் மணி பிளாண்ட். இதனை பராமரிப்பது மிகவும் எளிது என்பதால், பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. பசுமையான இலைகளுடன், பார்ப்பதற்கே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் இந்தச் செடி, வீட்டின் அழகை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மணி பிளாண்டை வளர்க்க வேண்டுமானால், சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொதுவாக, மணி பிளாண்ட் என்று அழைக்கப்படும் இந்தச் செடி, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, சுத்தமான காற்றை வழங்கும் ஆற்றல் கொண்டது. இதனால், வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை அல்லது சமையலறை என எந்த இடத்திலும் இதனை வளர்க்கலாம். குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும், சிறிய அளவிலான பராமரிப்பிலும் கூட இது மிக அழகாக வளரும் தன்மை கொண்டது.
இந்தச் செடியை வளர்ப்பதற்கு பெரிய அளவிலான முதலீடோ அல்லது இடவசதியோ தேவையில்லை. ஒரு குட்டி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை ஊற்றி, அதில் இந்தச் செடியின் சிறிய தண்டை வெட்டி வைத்தால் கூட, அது கொஞ்ச நாட்களிலேயே வேர்விட்டு வளரத் தொடங்கிவிடும். தண்ணீரில் வளர்க்கும் போது, வாரத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுவது மட்டுமே இதன் முக்கியப் பராமரிப்பாக இருக்கும். மண்ணிலும் இதனை எளிதாக வளர்க்கலாம். தொட்டிகளில் நல்ல மண் கலவையைப் பயன்படுத்தி, லேசான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால், இதன் இலைகள் மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும். மணி பிளாண்ட் என்ற பெயரிலேயே ஒரு ஈர்ப்பு இருப்பதால், இது வீட்டில் செல்வச் செழிப்பைக் கொண்டுவரும் என்ற பரவலான நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்தத் திசையானது விநாயகப் பெருமானுக்கும், சுக்கிர பகவானுக்கும் உரிய திசையாகக் கருதப்படுவதால், அங்கு இந்தச் செடியை வைக்கும் போது வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும் என்பது நம்பிக்கை. திசைகள் மற்றும் நம்பிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சிறிய செடி நம் கண்ணெதிரே வளர்வதைக் காண்பது மனதிற்கு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதுதான் உண்மை. வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், வீட்டின் ஒரு மூலையில் பசுமையாகப் படர்ந்து தழைத்திருக்கும் மணி பிளாண்ட், மனதிற்கு ஒருவித அமைதியைத் தருகிறது. இதற்கு அதிகளவில் சூரிய வெளிச்சம் தேவையில்லை என்பதால், நிழலான இடங்களிலேயே சிறப்பாக வளரும். ஆனால், இலைகள் காய்ந்து போனால், அவற்றை உடனுக்குடன் அகற்றிவிடுவது நல்லது. இதன் மூலம் செடி எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மிகக் குறைந்த பராமரிப்பில், அதிக அழகையும் நன்மைகளையும் தரும் ஒரு செடியை வளர்க்க விரும்பும் எவருக்கும் மணி பிளாண்ட் ஒரு சிறந்த தேர்வாக அமையும். இயற்கையின் அழகை நம் வீட்டிற்குள் கொண்டு வர நினைப்பவர்கள், தாராளமாக இந்த எளிய செடியை வளர்க்கத் தொடங்கலாம். பொதுவாக, மணி பிளாண்ட் என்று அழைக்கப்படும் இந்தச் செடி, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, சுத்தமான காற்றை வழங்கும் ஆற்றல் கொண்டது. கார்பன் மோனாக்சைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற அசுத்தமான காற்றை உறிஞ்சி, நமக்குத் தேவையான தூய்மையான ஆக்சிஜனை இது வாரி வழங்குகிறது. அலுவலக மேஜையின் மீது மணி பிளான்ட் செடியை வைக்கும்போது, அது பணியிடத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி பணப்புழக்கத்தை சீராக்க உதவுகிறது. பிசினஸில் சரியான முடிவுகளை எடுத்து முதலீடுகளில் பெருத்த லாபம் ஈட்டுவதற்குத் தேவையான தெளிவான மனநிலையையும் புத்துணர்ச்சியையும் இந்தச் செடி வழங்குவதாக நம்பப்படுகிறது...!!மணி பிளாண்ட் செடிகள்
செல்வச் செழிப்பு
சூரிய வெளிச்சம் - ஆரோக்கியம்
அலுவலக மேஜையில் வைக்கலாமா?