ஆவணி மாதம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள்


சென்னை: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ளார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள்.

ஞாயிறு என்றாலே சூரியன். ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் சிறப்பு.

ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். மகாவிஷ்ணு வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆவணி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் : சிம்மத்தில் சஞ்சாரம்

செவ்வாய் : மரக ராசியில் சஞ்சாரம்

புதன் : கடகத்தில் இருந்து 17ம் தேதி சிம்மம் ராசிக்கு மாற்றம்

குரு : துலாம் ராசியில் சஞ்சாரம்

சுக்கிரன் : கன்னியில் இருந்து 16ம் தேதி துலாம் ராசிக்கு மாற்றம்

சனி : தனுசு ராசியில் சஞ்சாரம்

ராகு : கடகம் ராசியில் சஞ்சாரம்

கேது : மகரம் ராசியில் சஞ்சாரம்

மேஷம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பா சம்பாதித்து வைத்த சொத்து கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும், 17ம் தேதி முதல் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.. குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், 16ம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.. சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள், தந்தையின் தொழிலுக்கு உதவுவீர்கள். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ள உகந்த காலாமாகும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.

ரிஷபம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு மனை கிடைக்கும், அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், ஆலய திருப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சீரடையும், 17ம் தேதிக்குப் பின்னர் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண கையிருப்பு குறையும், குழந்தைகளால் மனக் கஷ்டம் ஏற்படும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் மனைவியுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தொழில் நிலை மந்தமாக இருக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் தொல்லை உண்டாகும். கேது

ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மிதுனம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு இட மாற்றம் உண்டாகும், அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்படும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும், எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயத்திற்கு தக்கபடி பேசி வெற்றி பெறுவீர்கள் 17ம் தேதிக்குப் பின்னர் நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். கேது

எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

கடகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் 16ம் தேதிக்குப் பிறகு வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள், அம்மாவின் ஆலோசனை வாழ்க்கை வெற்றிக்கு வழி வகுக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம் பக்கத்தார்கள் எல்லா விஷயங்களிலும் உதவுவார்கள் 17ம் தேதிக்குப் பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.. சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை ஏற்படலாம், கடுமையாக வேலை பார்க்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

சிம்மம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நில புலன் வகையில் பிரச்சினை உண்டாகும், வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டியிருக்கும்.. புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரயங்கள் ஏற்படும் 17ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும், இடம் மாறும் நிலை ஏற்படும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் தகவல் தொடர்பு சிற[ப்படையும். சனி ஐந்டாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கடன் வாங்கும் நிலை உண்டாகும்.

கன்னி

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் உண்டாகும், அரசாங்க வகையில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் 17ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பின்னர் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சனி நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள், வாகனங்களை பராமரிப்பு செய்து வைத்துக் கொள்வீர்கள். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், தொழிலில் லாபம் உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள், சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும் 16ம் தேதிக்குப் பின்னர் நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் உண்டாகும், வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும்.. சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், நன்பர்களால் நன்மை உண்டாகும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டுவீர்கள்.

விருச்சிகம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும், படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும், அண்டை அயலாருடன் சச்சரவைத் தவிர்க்கவும்.. புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்ப்பது நல்ல்து, வீண் பேச்சுகளை தவிர்க்கவும். ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும்.

தனுசு

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உதவி கிடைக்கும், வெளிநாட்டுக்கு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், வீடு நிலம் மூலம் பண வருமானம் கிடைக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உண்டாகும் ஆசைகள் எல்லாம் எளிதில் நிறைவேறும், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும் 17ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் கவனம் தேவை, அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 17ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாகும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், பண வரவு சரளமாக இருக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருள் கிடைக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், அயல் நாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும்.. கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், வியாபாரம் விருத்தியாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும், வாகனங்கள் பராமரிப்புக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், 17ம் தேதி முதல் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், செல்வ நிலை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை 16ம் தேதி முதல் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆலய நற்பணிகளுக்கு செலவுகள் செய்யும் நிலை உண்டாகும்.

மீனம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும், தொழிலில் கவனம் தேவை. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு கிடைக்கும், புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் 17ம் தேதி முதல் தாய் மாமனுடன் பிரச்சினை செய்ய வேண்டாம். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும், குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும், வேலைப் பளு அதிகரிக்கும். ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

Have a great day!
Read more...

English Summary

Rasipalan for the Tamil Month of Aavani from August 17,2018 to Septemper 16,2018.