வாகைபதி நாராயணசுவாமி அய்யா கோயிலில் ஆவணி தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே உள்ள வகை குளத்தில் வாகைபதி நாதர் ஆதி நாராயணா ஐயா வைகுண்டர் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அய்யாவுடைய அன்னதர்மமும் பிரசாதமும் வழங்கப்பட்டது

வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதிவுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திரு விழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும் சிறப்பு வாவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வந்திருந்த பக்தர்களுக்கு அய்யா கணக்கு சொல்லப்படும் இந்த கோவிலில் அய்யாவிடம் என்ன முறையிடவும் அது நம்பிக்கையுடன் முழுமையாக நடக்கும் என்பது உண்மை இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு அதிகாலை 3 மணியளவில் கொடி இறக்கப்படும் விழா ஏற்பாடுகளை வாகைபதி அய்யா வழி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

Read more about: தேரோட்டம்

Have a great day!
Read more...

English Summary

Vagaipathi ayya sriman narayanasamy temple car festival on Monday near Ambasamuthiram, Tirunelveli district.