விநாயகர் சதுர்த்தி 2018: பிள்ளையாரை கேலி செய்த சந்திரன்... பாடம் கற்பித்த கணேசன்

மூன்றாம் பிறையை வானத்தில் பார்த்து வணங்குவார்கள். நான்காம்பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடுதான் என்பார்கள். இதற்கான காரணம் சந்திரனுக்கும் பிள்ளையாருக்கும் இடையேயான சண்டைதான்.


  • சென்னை: வளர்பிறை சதுர்த்தி நாளான நான்காம் நாளில் வானத்தில் பிறைச்சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அப்படி பார்த்தால் அந்த மாதம் முழுவதும் நாய் படாத பாடுதான் என்றும் எச்சரிப்பார்கள். இதற்கு ஒரு கதையே உள்ளது.

    Advertisement

    சாப்பாடு விசயத்தில் பிள்ளையாரை கட்டுப்படுத்தவே முடியாது. அம்மாவிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார். எனவேதான் பிள்ளையார் பக்தர்கள் அன்போடு படையலிடுகின்றனர். அந்த உணவு வகைகளை எல்லாம் ஒன்று விடாமல் சாப்பிட்டுவிடுவார் கணேசர்.

    Advertisement

    மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்


    ஒருநாள் அவரது பக்தர் ஒருவர் தனது வீட்டிற்கு விருந்து அழைத்து விதவிதமான பதார்த்தங்களை பிள்ளையாருக்குப் படைத்தார். அவரது வீட்டில் அன்று முழுக்க இருந்து அனைத்து உணவுகளையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார் விநாயகர். வயிறு முட்ட சாப்பிட்டு முடித்த போது நள்ளிரவு தாண்டி விட்டது. ஆனாலும் விட மனதில்லை. மீதமிருந்த பதார்த்தங்களை பார்சலாக எடுத்துக்கொண்டு வீடு நோக்கி கிளம்பினார்.

    உண்ட மயக்கம் தொண்டருக்கே வரும்... பிள்ளையார் என்ன செய்வார். மெதுவாக தடுதாறியபடியே நடந்து சென்று கீழே விழுந்து விட்டார். பலகாரங்கள் எல்லாம் திசைக்கு ஒன்றாக சிதறின. தான் விழுந்ததை யாராவது பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். நள்ளிரவு என்பதால் ஒருவரும் விழித்திருக்கவில்லை. எனவே சிதறிய பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு நிமிர்ந்த விநாயகர் வானில் சந்திரன் இருப்பதைப் பார்த்தார்.

    Advertisement

    விநாயகர் தள்ளாடி நடந்து வந்து விழுந்ததையும் மண்ணில் விழுந்த பலகாரங்களைப் பொறுக்கி எடுத்ததையும் பார்த்து கேலியாகச் சிரித்துக்கொண்டிருந்தான் சந்திரன். இதைப் பார்த்த கணேசருக்கு கடுமையாக கோபம் வந்துவிட்டது. “என்னைப் பார்த்தா சிரிக்கிறாய்?” என்று கேட்டார்.

    அதற்கு சந்திரனோ, சிரித்துக்கொண்டே, பெரிய தொந்தியையும் யானை முகத்தையும் பார்த்தால் எனக்குச் சிரிப்பு பொங்கி வந்துவிட்டது. அந்தக் கால்களை அசைத்து அசைத்து நடந்து வரும்போது கீழே விழுந்து புரண்டதைப் பார்த்தால் என்று சொல்லி சொல்லி சிரித்தார் சந்திரன்.

    சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்

    பிள்ளையாருக்கு கோபம் வந்து விட்டது. அதே கோபத்தோடு, நீ செய்த தவறுக்கு இனிமேல் நீ வானில் தோன்றாமல் மறைந்து போவாய் என்று கடுமையாக சாபம் அளித்தார். இதனால் வானமே இருண்டு போனது. விநாயகரின் சாபத்தால் தான் இனிமேல் தோன்றவே முடியாமல் போய்விடுமே என்று எண்ணினான் சந்திரன். தவறை உணர்ந்த அவன், என் பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும் விநாயகப் பெருமானே! என்று வேண்டிக்கொண்டான்.

    கோபம் தணியாத விநாயகர், அழகன் என்ற மமதையில் சிரித்த உன் தவறுக்கு பாடம் கற்பிக்கிறேன். இன்று முதல் 15 நாட்களில் நீ மெல்லமெல்லத் தேய்ந்து முழுவதும் மறைந்துவிடுவாய். ஒருநாள் முழுக்க நீ மறைந்தே இருப்பாய். அடுத்த 15 நாட்களில் வளர்ந்து மீண்டும் முழு உருவத்தை அடைந்து ஒளிவீசுவாய். ஆனால் அதுவும் ஒருநாள்தான் என்று சாப விமோசனம் அளித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்தது ஒரு வளர்பிறை சதுர்த்தி நாளில்தான்.

    Advertisement

    சதுர்த்தி நாளில் என்னை அவமதித்தித்ததால் உனக்கு இந்த சாபம் ஏற்பட்டது. இனிமேல் சதுர்த்தியில் உன்னைப் பார்க்கும் அனைவருக்கும் நீ கேடுகளை விளைவிப்பாய் என்றும் கூறினார் விநாயகர்.

    ஆவணி மாதம் வளர்பிறையில் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்பது திதிகளின் வரிசையில் நான்காவது நாள். விநாயகரை சந்திரன் அவமதித்த நாளும் சதுர்த்திதான். அன்று அவர் விநாயகரின் சாபத்தைப் பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், நான்காம் பிறை நாளில், அதாவது சதுர்த்தி அன்று யாராவது நிலாவைப் பார்த்தால் அவர்களுக்கு பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள். நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு என்று கூறுவதும் இதனால்தானாம்.

    Advertisement

    அழகாய் இருக்கின்ற ஆணவத்தில் யாரையும் கேலி செய்தால் இப்படித்தான் அவதிப்பட வேண்டும் என்று அப்போதே சந்திரனுக்கு உணர்த்தியிருக்கிறார் பிள்ளையார்.

    English Summary

    According to mythology, on the fourth day of the Bhadrapad month, Lord Ganesha was returning home with the mouse, moon god Chandra began to laugh aloud and commented on his belly and the tiny mouse. In order to teach the moon a lesson, Lord Ganesha cursed him that no light would ever fall on him.