நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் தனுசு ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய மாதமாக இருக்கும். 9 ஆம் இடத்தில் ராசிநாதன் இருந்து ராசியைப் பார்க்கிறார். 10, 11 ஆம் இடங்களில் சுக்கிரன், புதன் பரிவர்த்தனை, ஆட்சி என்ற அமைப்பில் உள்ளதால் அனுகூலமான அமைப்பு ஏற்படும். இதுவரை இருந்து வந்த பஞ்சாயத்துகள் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். கூட்டுக் குடும்பம், தனிக் குடித்தனம் செல்லும் அமைப்பு உள்ளது. குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உள்ளது, குடும்பத்தில் இருந்து பிரிந்து வெளியில் செல்லும் எண்ணங்களும் நிறைவேறும். இளைஞர்களுக்கு 3 மாதத்தில் திருமண யோகம் கூடி வரும். 2 ஆவது திருமணத்துக்கு பயந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல திருமண அமைப்பு உள்ளது. மனம் சந்தோஷமாக இருக்கும். விடாமுயற்சியுடன் செய்து கொண்டிருந்த விஷயங்கள், உங்களைத் தேடி வரும். சிலருக்கு புகழ் பெறும் அமைப்பு உள்ளது. நேர்மறையாக, நல்லவிதமான சோஷியல் மீடியாக்களில் பெயரெடுக்கும் யோகம் உண்டு. பெரியளவில் மாற்றங்கள் வரும். எதையும் சாதிக்கக்கூடிய மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எந்தக் குறையும் இல்லை என்பதை மன ரீதியாக உணருவீர்கள். உங்களுடைய எல்லை, உயரம் அறிந்து நேர்மையாக செயல்படுவீர்கள். லட்சியத்தை நோக்கிச் செல்லக்கூடிய யோகம் ஏற்படும். வேலை, தொழில், குடும்பம், படிப்பு என உங்கள் லட்சியத்தை நோக்கி செல்வீர்கள். இந்த மாதத்தில் இருந்து படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. பண வரவுக்குப் பிரச்சனை இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.தனுசு ராசி பலன்
திருமண யோகம்
புகழ் கிடைக்கும்
லட்சியம் நிறைவேறும்