நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் கடக ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன் , சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். ராசிநாதன் ராசியிலேயே மங்கள யோகத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரனும், செவ்வாயும் ராசியிலும், 2 இல் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். பணம் சம்பாதிக்க ஏற்ற காலமாக இருக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஆரம்பிக்கும் அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அஷ்டமத்தில் பெரிய பாதிப்புகள் அடைந்த கடக ராசியினருக்கு அடுத்த ஆண்டு அற்புதமாக அமைவதற்கான அடித்தளத்தை இந்த மாதம் போட்டு வைப்பீர்கள். ஜென்மசனி ஆம்பிக்கும்போது மட்டும் சிறு சிறு கஷ்டங்கள் வரும். மற்றபடி வரும் 10 ஆண்டுகளுக்கு தொழிலில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அமைப்பு உள்ளது. ஏதாவது ஒரு நிலையில் சொத்துக்கள் சேரும். வீடு, இருசக்கர வாகனம், கார் வாங்கும் யோகம் ஏற்படும். நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவம்பர் 12 ஆம் தேதிக்குப் பிறகு 2 ஆம் இடத்தில் குரு மங்கள யோகம் உருவாகிறது. நவம்பர் 13 முதல் 30 ஆம் தேதி வரை அட்டகாசமான மாதமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிலும் தொட்டது துலங்கக்கூடிய நல்ல அமைப்பு. நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றரை மாதம் அற்புதமாக இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். 45 நாட்கள் நல்ல விதமாக இருப்பதால் கடின முயற்சிகளைப் போட்டால் அதற்கான பலனைப் பெறக்கூடிய காலகட்டம். உழைப்பு உங்களுக்கு ஊதியத்தை தரக்கூடியதாகவும், பணத்தை அனுபவிக்கக் கூடிய காலமாகவும் இருக்கும். விவசாயிகள், உத்தியோகத்திற்குச் செல்பவர்கள், விவசாயப் பெருமக்கள் என எல்லா துறையினருக்கும் பண வரவைக் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும்.கடகம்
முன்னேற்றம்
சொத்துகள் சேரும்
நல்ல நேரம் ஸ்டார்ட்
அனுகூலம்