நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் மீன ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு மாத்ததின் நடுப்பகுதியில் 7 ஆம் இடத்தில் சுக்கிரன் வந்து ஜென்மசனியைப் பார்க்கிறார். ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைப்பதால் மனதிற்கு நல்ல நிம்மதி ஏற்படும். 12 ஆம் தேதிக்குப் பிறகும், முன்பும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்பதில் ஒரு புரிதல் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். 30 வயதுக்குள்ளானவர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்திருப்பீர்கள். சிம்ம ராசியும், மீன ராசியும் கண்டிப்பாக அஷ்டமத்து சனியிலும், ஜென்ம சனியிலும் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல இருந்த அத்தனை மீன ராசியினருக்கும் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் இந்த மாதத்தில் இருந்து படிப்படியாக வரும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். ரேவதி 1, 2 ஆம் பாதக்காரர்களுக்கு இருந்து வரும் சிறு மன அழுத்தங்கள் படிப்படியாக நீங்கும். கடன் தொல்லைகளில் சிக்கியிருப்பவர்கள் சிறு சிறு பாதிப்புகளை நவம்பர் மாத்தில் இருந்து சந்திப்பீர்கள். அடுத்த மாதம் டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். ராகு பகவான் 11 ஆம் இடத்துக்கு செல்வதால் அடுத்த மாதம் கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் ஏற்படும். கடனை அடைக்கக்கூடிய அளவுக்கு வருமானங்கள் வரும். நவம்பர் மாதத்தில் பயணங்கள் அதிமாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும் தன்மை உள்ளது. மற்றவர்கள் உங்களை நம்பாமல் இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது. நீங்கள் மாறினாலும் கூட மற்றவர்கள் நம்பாத சூழ்நிலை இருக்கும். காதலில் சிறு மன அழுத்தங்கள் இருக்கும். கெட்டபழக்க வழக்கங்களால் வந்த பிரச்சனைகள் தீராமல் இருக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலை நம்பி எல்லாவற்றையும் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களிலும் நன்மையைத் தரக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் அமையும். அடுத்தடுத்து வரக்கூடிய நல்ல மாற்றங்களால் நிறைவையும், ஏற்றத்தையும் பெறும் மாதமாக இருக்கும்.மீன ராசி பலன்
மாற்றங்கள்
கடன்கள் தீரும்
கடன் தீரும் அமைப்பு
முன்னேற்றம்