மேஷ ராசிக்கு நவம்பரில் லக்கி ஜாக்பாட்.. எதிர்பாராத பணவரவு.. மாற்றம் நடக்கப்போவது நிச்சயம்

  • நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் மேஷ ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம்

    மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கிறது. சுக்கிரன், குரு ஆகிய 2 சுபர்கள் ராசியைப் பார்க்கின்றனர். ராசியை குரு மாதம் முழுவதும் பார்க்கிறார். சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்களில் பார்க்கிறார். இதனால் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் காலகட்டம். இருக்கும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

    Advertisement

    வருமானம்

    செலவுகள் இருந்தாலும் கூட அதற்கேற்ப வருமானம் வரக்கூடிய அமைப்பு உள்ளது. 5 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் இப்போது லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வியாபாரிகள், தொழில் செய்வோருக்கு தொட்டது துலங்கக்கூடிய அருமையான மாதமாக இருக்கும். ராசிநாதன் நவம்பர் 13 ஆம் தேதி 5 ஆம் இடத்துக்கு மாறுவதால் குரு மங்கள யோகம் உண்டாகும்.

    திருமண யோகம்

    ராசிநாதனும், ராசியும் குருவோடு தொடர்புடையதால் மாதத்தின் பிற்பகுதி இரு வாரங்கள் அருமையாக இருக்கும். கட்டடம், நெருப்பு, பூமி சார்ந்த தொழில் அமைப்புகளோடு தொடர்புடையவர்களுக்கு மிகப்பெரிய யோக பலன்கள் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு நிறைய நல்லவைகள் நடக்கும் அமைப்பு உண்டாகும். திருமண யோகம் ஏற்படும். புதிதாக காதல் மலரக்கூடிய அமைப்பு உள்ளது.

    Advertisement

    எதிர்பாராத பணவரவு

    வாழ்க்கைத் துணைவர் யார் என்பதை அடையாளம் காணக்கூடிய காலகட்டம். பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும். வேலை நிச்சயமாகக் கிடைக்கும் அமைப்பு உள்ளது. வேலையில் முன்னேறுவதால் ஆண்களால் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் ஏற்படும். சகோதரர்களால் மேன்மைகள் உண்டாகும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.

    அனுகூலம்

    8 ஆம் அதிபதி சுபத்துவம் ஆவதால் நவம்பர் மாதம் 12 ஆம் தேதிக்குப் பிறகு 18 நாட்களுக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். வராமல் இருந்த பணம், மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்த பணம் போன்றவை மீண்டும் கைக்கு வரும் அமைப்புள்ளது. எல்லா விஷயத்திலும் நிறைவுகள் வரக்கூடிய மாதங்கள் இருக்கும்.

    Advertisement

    சோம்பல் விலகி புத்துணர்ச்சி கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். குரு, சுக்கிரனால் யோகம் பெறக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு அமையும். எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

    English Summary

    November 2026 brings Mesham natives promising opportunities for financial gains, career advancement, marriage, new love, and family happiness, with unexpected money and pending dues likely to return.