நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் மிதுன ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன் , சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானம் வலுவாக இருக்கிறது. 5, 9 பாவங்கள் சுபர்களின் தொடர்பில் வலிமையாக இருப்பதால் தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். ஆதரவுகள் உண்டாகும். உங்களுடைய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரமிக்க, அந்தஸ்து உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். 10 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும் பாதி நாட்கள் சுக்கிரனின் பார்வை இருப்பதால் நல்ல காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் வலிமையாகவும், குருவும் கேள யோகத்திலும் இருப்பதால் பணம் சம்பாதிக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. அஷ்டமத்து சனியில் கடும் பண இழப்புகளை, மன அழுத்தங்களை அடைந்தவர்களுக்கு இழந்த பணத்தை மீண்டும் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். இரும்புத் தொழில், விவசாயத் தொழில், பெட்ரோல் நிலையம், மதுபானக் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள், நன்மைகள் இந்த மாதத்தில் இருந்து ஏற்படும். குழந்தைகளால் இருந்து வந்த மன கஷ்டங்கள் நீங்கும். பிள்ளைகளுக்கு திருமணமாகும் யோகம் ஏற்படும். அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் பற்றி பெருமிதம் கொள்ளக்கூடிய நேரம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுக்கிரன்,புதன், சனி ஆகிய 3 கிரகங்கள் நன்றாக இருப்பதால் பணவரவு கிடைக்கும், கடன் தொல்லைகள் விலகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். 7, 9, 11 ஆம் இடங்கள் சுபத்துவம் பெறுவதால் காதல் வாழ்க்கையில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். திருமணம் கைகூடி வரும். மனதிற்குப் பிடித்தவரை திருமணம் செய்யக்கூடிய யோகம் உண்டு. காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், அனுகூலம் ஏற்படும். சகலவிதமான விஷயங்களிலும் நன்மைகள் அதிகம் பெறும அமைப்பு. பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.மிதுனம்
சுக்கிரன் அருள்
திருமண யோகம்
சுபநிகழ்ச்சிகள்
காதலில் வெற்றி