சிங்கம் களமிறங்கப் போகுது.. அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. நவம்பரில் அடிக்கும் ஜாக்பாட்

  • நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைதி, நிம்மதி, சந்தோஷம், வெற்றிகள் வரக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு அமையும். பூர நட்சத்திரக்காரர்கள் படாத பாடு பட்டிருப்பீர்கள். நவம்பர் 15க்குப் பிறகு 4 ஆம் இடத்துக்கு சூரியன் வரப்போவதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். ராசியிலேயே குரு பகவான் அமர்ந்திருக்கிறார்.

    மகர ராசி பலன்: தொட்ட காரியமெல்லாம் வெற்றி.. பணமழை கொட்டும், சொந்த வீடு வாங்கும் யோகம்

    யோகம்

    நவம்பர் மாதம் 12 ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் குரு, செவ்வாய், கேது 3 கிரகங்களும் ராசியிலே அமர்வது மிகப்பெரிய யோகத்தை ஏற்படுத்தும். மாதத்தின் முற்பகுதி சுமாராக இருந்தாலும், பிற்பகுதி அற்புதமாக இருக்கும். முதல் 12 நாட்கள் கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை இருக்கும். வேலையில் அழுத்தம் ஏற்படும். கணவர் பேச்சை மனைவியும், மனைவியின் பேச்சை கணவர் கேட்காத நிலைமை இருக்கும்.

    Advertisement

    வெற்றி மேல் வெற்றி

    பெற்றோர் பேச்சை நாம் கேட்காதது, இளைய பருவத்தினர் கெட்ட பழக்க வழக்கங்களில் இருப்பது, தேவையற்ற தொடர்புகள் போன்றவை இருந்திருக்கும். முதல் 12 நாட்கள் சுமாராக இருந்தாலும், பிற்பகுதியில் குருமங்கள யோகம், கேள யோகத்தில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயத்திலும் வெற்றி பெறக்கூடிய ஆரம்ப மாதமாக இந்த நவம்பர் மாதம் அமையும்.

    ஆட்டத்தை ஆரம்பிக்கும் கடக ராசி.. அள்ளிக் கொடுக்கப் போகும் குரு.. இனி எல்லாமே சக்சஸ்

    தொழில்

    வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆனவர்கள் மீண்டும் வேலையில் சேர்வீர்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல புதிய வேலை கிடைக்கும். தொழில் நடக்காதவர்களுக்கு தொழில் நடப்பது, நன்றாக ஓடக்கூடிய அமைப்பு உள்ளது. அஷ்டம சனி ஜூன் மாதத்தில் இருந்து விலகுவதால் வெற்றி நடை போடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    பணவரவு

    உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். குடும்ப நிம்மதி ஏற்படும். 90 சதவீத சிம்ம ராசியினர் பலன்கள் கிடைக்கப் போகிற ஆரம்பமாக நவம்பர் மாதம் இருக்கும். இந்த மாதத்தில் இழந்த பெருமையை மீட்டெடுப்பீர்கள். கடனில் இருந்து, தோல்வியில் இருந்து வெளியில் வரக்கூடிய, அனுகூலமா மாதமாக இருக்கும்.

    English Summary

    In this post, we will look at what the month of November holds for those born under the sign of Leo (Simmam Rasi) regarding their career, job, family, and finances, as well as the matters they should be cautious about.