துலாம் ராசிக்கு நவம்பரில் ராஜயோகம்.. வருமானம் பெருகும், கடன் தீரும், நினைத்த காரியம் கைகூடும்!

  • நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் துலாம் ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    துலாம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான மாதமாக இருக்கும். கனவுகள் நனவாகும். நினைத்தவை எல்லாம் நிகழும். மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். பொற்காலம் என்று சொல்லுமளவுக்கும் யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். மாதத்தில் இடையில் 10 நாட்கள் மட்டும் சுக்கிரன் நீச்சமடைந்தாலும் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார். 11 ஆம் இடத்தில் நவம்பர் 12 ஆம் தேதிக்கு மேல் செவ்வாயும், குருவும் சேருவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும்.

    செலவுகள் அதிகரிக்கும்

    தனாதிபதிகள் 2, 3, 6 ஆம் அதிபதிகள் ஒன்றாக சேர்வது யோகத்தைக் கொடுக்கும். இதுவரை கடந்த நாட்களில் எந்த தொழில் சம்பாதிக்க முடியாமல் இருந்தீர்களோ அவற்றில் சம்பாதிக்கக்கூடிய நல்ல அமைப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிப்பது, பெண்களால் செலவுகளால் வரும் அமைப்பு உள்ளது. பெண் வழி உறவுகள், காதலன், காதலியால் செலவுகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது.

    Advertisement

    கடன் தீரும்

    செலவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கக்கூடிய மாதமாக இருக்கும். கடன் தொல்லைகள் எதுவும் பெரிய அளவில் இருக்காது. கடனை அடைக்கக்கூடிய அளவுக்கு வருமானம் வரக்கூடிய மாதமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் இருந்து மிகப்பெரிய அளவில் நன்மைகள் நடக்கும். 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

    வருமானம் கொட்டும்

    நல்ல வருமானங்கள் வரும். வேலையில் இதுவரை இல்லாத வகையில் நல்லவை நடக்கும், நிம்மதி ஏற்படும். பெரிய அளவுக்கு சோதனைகள் இருக்காது. சட்டப்பூர்வமான போராட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். யாரை ஜெயிக்க முடியாது என்று நினைத்தீர்களோ அவர்களை ஜெயிக்கக்கூடிய தன்மை ஏற்படும். அடுத்தடுத்து நடக்கக்கூடிய பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒற்றுமை ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய காலமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர மேன்மைகள் இருக்கக்கூடிய அருமையான மாதமாக இருக்கும்.

    English Summary

    In this post, we will look at what the month of November holds for those born under the sign of Libra (Thulam Rasi) regarding their career, job, family, and finances, as well as the matters they should be cautious about.