விருச்சிக ராசிக்கு 5 வருடம் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.. இனி உங்க காட்டுல பண மழை கொட்டும்

  • நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். 11, 12 ஆம் இடங்களில் சுக்கிரன் மாறி மாறி இருக்கிறார். உங்கள் ராசிநாதன் முதல் 12 நாட்களுக்கு நீச்சத்தில் இருப்பார். மாதத்தின் ஆரம்பம் 1 ஆம் தேதி நீச்சபங்க அமைப்பில் இருப்பார். சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து சந்திர மங்கள யோகத்தில் இருக்கும். 12 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து குரு மங்கள யோகம் உருவாவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    குருவின் அருள்

    முதல் 12 நாட்கள் ஏதாவதொன்று தடையாக இருக்கும். பிற்பகுதி 18 நாட்கள் நிறைவுகள், மேன்மைகள் இருக்கக்கூடிய தன்மைகள் ஏற்படும். டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி, ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சி, இடையில் வரும் குருப்பெயர்ச்சி அனைத்தும் உங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய அருமையான நல்ல மாதமாக நவம்பர் மாதம் அமையும்.

    Advertisement

    முன்னேற்றம்

    கடந்த காலங்கள் இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் நீங்கி சகலவிதத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய வேலை, தொழில் ஆரம்பிப்பது, குடும்ப அமைப்பு நன்றாக இருப்பது போன்ற நல்ல மேன்மைகள் உண்டாகும். பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு 10 ஆம் இடத்தில் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் தென்படும்.

    மும்மடங்கு வருமானம்

    வரும் 5 வருடத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். தொழிலை ஆரம்பித்தால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய வேலை கிடைப்பது, புதிய கிளைகள் ஆரம்பிப்பது என எல்லா விஷயத்திலும் அனுகூலம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். இப்போது இருக்கும் வருமானத்தை விட மும்மடங்கு வருமானம் பெறக்கூடிய அமைப்பு உள்ளது.

    English Summary

    In this post, we will look at what the month of November holds for those born under the sign of Scorpio (Viruchigam Rasi) regarding their career, job, family, and finances, as well as the matters they should be cautious about.