நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் மகர ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு நல்ல திருப்புமுனைகள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். 8 இல் கேள யோகம் ஆரம்பிக்கிறது. 8 ஆம் இடத்தில் குருவும், கேதுவும் சேர்ந்திருப்பதால் தூர இடங்களில் இருந்து பண வரவுகள் வரக்கூடிய அமைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அற்புதமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்களிடமிருந்து வர வேண்டிய உதவிகள் அனைத்தும் வந்து சேரும். எதிர்பார்த்தவை நடக்கக்கூடிய காலகட்டம். ராசிநாதன் இந்த மாதம் முழுவதும் வலுவாக இருக்கிறார். சுக்கிரனுடைய பார்வையில் ராசிநாதன் வலுவாக இருக்கிறார். இது மிகப்பெரிய யோக அமைப்பாகும். பணம் சம்பாதிப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக விலகக்கூடிய காலகட்டமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். உங்களுடைய பாதை தெளிவாகும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உண்டாகும். சிலருக்கு திடீரென திருமண யோகம் ஏற்படும். தைரியம் பிறக்கும். அடுத்தடுத்து ஏதாவதொன்று நடந்து அதன் மூலமாக அதிர்ஷ்டம் வரக்கூடிய மாதமாக இருக்கும். தைரியம் பிறக்கக்கூடிய அமைப்பு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரும். சிவப்பு நிற பொருள்களால் லாபம் வரும். நெருப்பு, ரியல் எஸ்டேட், கட்டடம் சார்ந்த தொழில் அமைப்பில் இருப்பவர்களுக்கு நல்ல அமைப்பு உள்ளது. செக்யூரிட்டி, சீரூடைப் பணியாளர்கள், காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் 13 ஆம் தேதியில் இருந்து 17 நாட்களுக்கு நல்லவைகள் நடக்கும் அமைப்பு உள்ளது. தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் இல்லாதவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல பண வரவு இருக்கும். மகர ராசி பெண்களுக்கு பெரிய அளவில் இதுவரை பாதிக்கப்பட்டிருப்பீர்கள். வேலையை நேசித்து வந்த உங்களுக்கு இனி வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எல்லாவற்றிலும் நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான மாதமாக இந்த நவம்பர் மாதம் அமையும்.மகர ராசி பலன்
சுக்கிரன் பார்வை
திடீர் அதிர்ஷ்டம்
தொழில்
அனுகூலம்