அக்டோபர் மாத பலன்: தூள் கிளப்பும் கடக ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் தங்கமாகும் நேரம்

  • அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் கடக ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது கடகம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

    அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    கடகம் ராசி பலன்

    கடக ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே தர்மகர்மாதிபதி யோகமும், நீச்சபங்க யோகமும் இருக்கக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும். குருமங்கள யோகம், நீச்சபங்க ராஜயோகம், தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. ராசியில் இந்த மாதம் முழுவதும் குருவும், செவ்வாயும் இணைந்திருக்கின்றனர். இது அற்புதமான நல்ல அமைப்பாகும். 9 ஆம் இடத்தில் பாக்கியங்களை சனி தடுத்துக் கொண்டிருக்கிறார்.

    தொட்டது துலங்கும்

    இருப்பினும், சனிக்கு குரு பகவான் பார்வை இருப்பதால் தடைகள் தவிடு பொடியாகும். குருவும், செவ்வாயும் இணைவதால் மிகப்பெரிய யோகத்தை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களையும் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். முயற்சிகள் செய்தால் கண்டிப்பாக வெல்லும் அமைப்புள்ளதால் இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    குரு, செவ்வாய் சேர்க்கை உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். சகோதர மேன்மை ஏற்படும். கட்டடத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மருத்துவம் படிப்பவர்களுக்கு ஏற்றம், மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்பவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு யோக பலன்கள் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இருப்பதால் சுகத்திற்காக நிறைய செலவுகளை செய்வீர்கள்.

    வீடு வாங்கும் யோகம்

    வீட்டிற்குத் தேவைாயான பொருள்களை வாங்குவீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. குடும்பத்தில் சுப விஷயங்கள் நடக்கும். செவ்வாய் 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மாமன் மகள், அத்தை மகனை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    வருமானம்

    உங்கள் விருப்பம் போல திருமண நடைபெறும் அமைப்பு உண்டாகும். ராசியில் உச்சகுரு மங்கள யோகத்தில் இருப்பதால் சோஷியல் மீடியாவில் நன்றாக சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. வயதிற்கு ஏற்றாற்போல கிரகங்கள் நன்றாக இருக்கின்றன. 8 இல் ராகு இருப்பதால் பயணங்கள் மூலமாக எரிச்சல்கள், தடைகள் என சிறிய சிறிய பாதிப்புகளைத் தரும். மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

    English Summary

    October matha palan: October is expected to bring Kadagam Rasi natives better finances, career progress, family happiness, and opportunities related to property and vehicles.