அக்டோபர் மாத பலன்: கன்னி ராசிக்கு அதிர்ஷ்டமும் ஆபத்தும் சேர்ந்து வருது.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்

  • அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் கன்னி ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது கன்னி முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

    அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரக்கூடிய அற்புதமான மாதமாகும். செப்டம்பர் மாதத்தில் பெரிய அளவில் கஷ்டங்கள் இருந்திருக்காது. நிறைய நன்மைகள் கிடைத்திருக்கும். இந்த மாதம் 2 ஆம் இடத்தில் புதனும், சுக்கிரனும் சேர்வதால் பண வரவு நன்றாக இருக்கும். பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் கிடைக்கும் யோகம் உண்டு.

    சொத்து

    பங்காளித் தகராறு, பூர்வீக சொத்துகளை அனுபவிக்க முடியாத தன்மைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். கன்னி ராசி பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கக்கூடிய காலம். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். தன லாபம் ஏற்படும். பணவரவு அபரிமிதமாக வரக்கூடிய யோகம் உண்டு. புதிய வேலை கிடைக்கும்.

    Advertisement

    வேலைவாய்ப்பு

    புதிய சிந்தனைகள் குறையும். உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். வேலை இழப்பு போன்றவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நல்ல வேலை வாய்ப்புகளுக்கு ஆஃபர்கள் வந்து சேரும். அடுத்தடுத்து வரும் சூழ்நிலைகள் நன்றாக இருக்கும். ஜூன் மாதம் அஷ்டமத்துசனி உங்களுக்கு ஆரம்பிக்கப் போகிறது. அதற்கு 6 மாதங்களுக்கு முன்பு புதிய தொடர்பு, புதிய அமைப்பு ஏற்பட்டு அதில் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

    கவனம்

    அதனால், இந்த அக்டோபர் மாதத்தில் பண விஷயத்தில் கவனம் தேவை. தொழில் ஆரம்பிக்கலாம் என்று கூறினால் தள்ளியிருப்பது நல்லது. இல்லையெனில் சிக்கலில் சிக்குவீர்கள். உறவுகள், நட்புகள் கெடுவதற்கான வாய்ப்புள்ளது. 8 ஆம் இடத்தில் சனி வருகிறார் என்பதால், விரயங்கள் தருவதற்கான அச்சாரம் இந்த மாதத்தில் ஏற்படும். பணத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    பொருளாதார்ததில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நட்பு, உறவுகளை நம்பாமல் இருப்பது நல்லது. முக்கியமான விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனை, அறிவுரை கேட்டுக் கொண்டு செயல்படக் கூடிய மாதமாக இந்த மாதமாக அமையும்.

    English Summary

    October matha palan: October is expected to bring Kanni Rasi natives better finances, career progress, family happiness, and opportunities related to property and vehicles.