மகரம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்..வீடு, நிலம் வாங்கும் யோகம்

  • அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் மகரம் ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது மகரம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

    அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    மகரம் ராசி பலன்

    மகரம் ராசிக்காரர்களுக்கு ராசியும், ராசிநாதனும் உச்சகுருவின் பார்வையில் இருக்கும் அற்புத மாதமாகும். லாபாதிபதி உங்களுக்கு 7 ஆம் இடத்தில் உச்சமாகி குரு மங்கள யோகத்தில் இருக்கிறார். நீச்சபங்க ராஜயோகத்திலும் இருக்கிறார். உங்களுக்கு படிப்படியாக முன்னேற்றமும், வளர்ச்சியும் காணப்படும். ஜூன் மாதத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். 10 ஆம் இடத்தில் சூரியன் புதன் சேர்ந்திருப்பது யோக பலன்களைத் தரும்.

    தடை நீங்கும்

    8 ஆம் அதிபதி இப்போது நீச்சமாக இருப்பதால் எதிர்மறையாக இருந்த விஷயங்கள் விலகும். எதிர்ப்புகள், எதிராளிகள், துரோகிகளை அடையாளம் காணுவீர்கள். அஷ்டமாதிபதி நீச்சமாகி 10 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். மனக் கட்டுப்பாடு வரும். தொழில் மீது பற்று வரும். தொழிலை நன்றாக கவனிப்பீர்கள்.

    Advertisement

    லாபம் கொட்டும்

    அதிர்ஷ்டம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத நன்மை, பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். பணத்தை இழந்த அமைப்புகள், விரயங்கள் நீங்கும். வீடு, காடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு குழந்தைகள், கணவன் மேல் இருந்து வந்த சில கவலை, மாற்றங்கள் நீங்கும்.

    பணவரவு

    எதையும் சாதிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். வியாபாரம், தொழில், வேலை, படிப்பில் ஏற்றம் காணப்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். தடைகள் விலகி தெளிவடையக் கூடிய காலகட்டம். குழப்பமான மன நிலைகள் நீங்கும்.

    English Summary

    October matha palan: October is expected to bring Magaram Rasi natives better finances, career progress, family happiness, and opportunities related to property and vehicles.