அக்டோபர் மாத பலன்: செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியினருக்கு குடும்பம், தொழில், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும், என்னவிதமான பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றமானது துலாம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.
அக்டோபர் மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில், கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளது. சுக்கிரன் ஆட்சி பெற்றுள்ளது. புதன் வலுவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரனுடைய வீட்டில் உள்ளது. செவ்வாயும், குருவும் உச்ச குருவின் தொடர்பில் உள்ளது. ராகு கேதுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது. இதனால், 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விடிவுகாலம் ஏற்படக்கூடிதாக இந்த அக்டோபர் மாதம் அமையும். பெரிய அளவில் சாதிப்பீர்கள். 2 மாதம் ராசிநாதன் ராசியிலேயே இருக்கப் போகிறார். 9, 11க்கு உடையவரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு ராசியில் இருக்கின்றனர். மாதம் முழுவதும் சுக்கிரன், புதன் ராசியில் இருக்கப் போகின்றனர். லாபாதிபதியாகிய சூரியன் நீச்சமாக இருந்தாலும் நீச்சபங்கமாகி ராசியில் 9க்கு உரியவருடன் சேர்வதால் பொருளாதார முன்னேற்றம் அருமையாக இருக்கும். வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு நல்ல லாபம் மற்றும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காசு பணத்திற்குப் பிரச்சனை இருக்காது. பணத்தின் கையிருப்பு அதிகரிக்கும். 10 ஆம் இடத்தில் செவ்வாய் குருமங்கள யோகத்தையும், நீச்சபங்க யோகத்திலும் இருப்பது யோகத்தைக் கொடுக்கும். மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய கடன்கள் வரும். தொழில், வியாபாரம், சொத்துகள் வாங்குவதற்கு என கடன்கள் வாங்குவீர்கள். அதன் மூலம் வளர்ச்சி பெறும் யோகம் உண்டாகும். வருமானம் பெருகக்கூடிய மாதமாக இருக்கும். எல்லா விதத்தில் தனித்த சிந்தனை இருக்கும். அதனை செயல்படுத்துவீர்கள். காதல் நிறைவேறும். புதிய காதல் வரக்கூடிய அமைப்பு உள்ளது. ஆண், பெண்ணுக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு நல்ல பிரபலமாகும் அமைப்பு உள்ளது. சிலருக்கு திடீர் புகழ் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம், வேலை ரீதியாக திடீர் புகழ், வெளிச்சத்தைப் பெறுவீர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். வயது குறைந்தது போன்ற தோற்றத்தைப் பெறுவீர்கள். ராசிநாதன் ஆதரவாக இருப்பதால் இரண்டு மாதங்கள் உங்களுக்கு எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். செய்யும் விஷயங்களை நேர்த்தியாக செய்து முடிப்பீர்கள்.துலாம் ராசி பலன்
முன்னேற்றம்
வளர்ச்சிக்கான கடன்
திடீர் புகழ்
தொட்டது துலங்கும்