தனுசு ராசிக்கு திறக்கும் புதிய கதவு.. வேலை, தொழில், பணவரவில் எதிர்பாராத திருப்பம்!

  • புரட்டாசி மாத பலன்: தனுசு ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசிக்காரர்களுக்கு யோகாதிபதியும், பாக்கியதிபதியுமான சூரியன் 10 ஆம் இடத்துக்குள் நுழைந்திருக்கிறார். இந்த மாதம் முழுக்க பரபரப்பாக காணப்படுவீர்கள். முடியாது என்கிற வேலையையும் முடித்துக்காட்டுவீர்கள். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருக்கும் உத்தியோகத்தில் திடீரென பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    பணவரவு

    சூரியன் பலமாக இருப்பதால் தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதேநேரத்தில் சூரியனுக்கு சனியின் பார்வை இருப்பதால் அப்பாவுக்கும் உங்களுக்கும் சிறு சிறு கருத்து மோதல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரனும் புதனும் நல்ல நிலையில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். செல்வாக்கு கூடும்.

    தொழில் தொடங்கும் யோகம்

    புதன் சாதகமாக இருப்பதால் புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை, முயற்சிகள் போன்றவை சாதகமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் 8 ஆம் வீட்டுக்குள் நுழைகிறார். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது, அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

    Advertisement

    முயற்சிகளில் வெற்றி

    பிள்ளைகள் உத்தியோகத்திற்கான உங்களை விட்டுப் பிரிந்து சொல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ராசிக்கு ஆதரவாக ராகு இருப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய பாக்கிகள் வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் நல்ல பெயர், செல்வாக்கு அதிகரிக்கும்.

    வழிபாடு

    குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆஞ்சநேய சுவாமிகளை வழிபாடு செய்வது சகலவித நன்மைகளைத் தரும். மூட்டை சுமக்கும் தொழிலாளிகளுக்கு உதவுவது, வேர்க்கடலை தானம் செய்வது நன்மை பயக்கும்.

    English Summary

    Purattasi Palan: Dhanusu Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.