கடக ராசிக்கு ஜாக்பாட்.. புரட்டாசியில் வரும் அதிர்ஷ்டம்.. வீண் செலவுகள் குறையும்

  • புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காணம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசிக்காரர்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக ராசிக்கு 12 ஆம் இடத்தில் விரய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருந்த செவ்வாய் பகவான் அந்த இடத்தில் இருந்து விலகுகிறார். ராசிக்குள் ஏற்கனவே இருக்கும் குருவுடன் செவ்வாய் பகவான் அமர்கிறார். வீண் அலைச்சல்கள் விலக ஆரம்பிக்கும். வீண் செலவுகள் குறையும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

    Advertisement

    செல்வாக்கு கூடும்

    சரியான தூக்கம் இல்லாமல் எப்போதும் சோர்வாகவும், அசதியாகவும் இருந்த நிலைமைகள் மாறும். எப்போதும் உற்சாகத்துடன் இனி காணப்படுவீர்கள். எல்லா வகையிலும் செல்வாக்கு அதிகரிக்கும். 2 ஆம் இடத்தில் கடந்த 1 மாதமாக இருந்த சூரியன் மிகுந்த கோபத்தையும், ஓரளவு செல்வாக்கையும் கொடுத்திருப்பார். இப்போது 3 ஆம் இடத்துக்கு வந்த சூரிய பகவானால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

    வீண் செலவுகள் குறையும்

    எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வீண் செலவுகள் குறைந்து அத்தியாவசிய செலவுகள் மட்டும் இருக்கும். 3 ஆம் வீட்டில் சூரியன் அமர்ந்துள்ளதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். ஆளுமைத் தன்மை அதிகரிக்கும். சுகாதிபதியாக இருக்கும் சுக்கிரன் தன் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் பழைய வண்டிகளை கொடுத்துவிடலாம் என்கிற யோசனை ஏற்படும்.

    Advertisement

    புதிய வாகன யோகம்

    நவராத்திரி காலத்தில் புதிய வண்டிகளை வாங்குவீர்கள். வீட்டு உபயோகப் பொருள்களை பழையவற்றை கொடுத்துவிட்டு புதிதாக வாங்குவீர்கள். எல்லா விஷயங்களையும் புதுப்பிக்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு ஆதரவாக புதன் பயணிப்பதால் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்களுடன் இருந்த வந்த ஒருவிதமான நிலைமைகள் மாறி சந்தோஷம் ஏற்படும்.

    வழிபாடு

    எல்லா வகையிலும் வெற்றி ஏற்படும். வியாபாரத்தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். ஸ்ரீ பைரவரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும், காது கேளாதோருக்கு உதவுவது மேன்மையைத் தரும். துவரம்பரும்பு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.

    English Summary

    Purattasi Palan: Kadagam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.