கும்ப ராசியினரே.. இனி கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.. புரட்டாசியில் கைகூடும் முக்கிய விஷயங்கள்

  • புரட்டாசி மாத பலன்: கும்பம் ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக குழப்பங்களும், தூக்கமின்மையும், நெருக்கடியும், பணப் பற்றாக்குறையும் இருந்திருக்கும். தற்போது செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவானுடன் இணைவதால் மனதில் இருந்த தடுமாற்றம், தயக்கம், முன்கோபம் அனைத்தும் விலகும். தைரியம் அதிகரிக்கும். எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்கிற உற்சாகம் ஏற்படும் அமைப்பு.

    Advertisement

    பிரச்சனை தீரும்

    குரு பகவானும், செவ்வாயும் 6 ஆம் இடத்தில் இருப்பதால் சொத்துப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பேசி தீர்ப்பீர்கள். சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் சாதகமாக முடியும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இந்த மாதம் முழுவதும் இருப்பதால் எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். அதேநேரத்தில், குரு பகவான் மறைந்திருப்பதால் வீண் பழிகள் வந்து சேரும். செய்யாத தவறுக்கு கூட செய்ததாக வதந்திகள் பரவும்.

    கோபம் குறையும்

    7 ஆம் வீட்டில் அமர்ந்திருந்த சூரியன் 8 ஆம் இடத்துக்கு வந்துள்ளதால் இந்த மாதம் முழுவதும் அமைதியாக இருப்பீர்கள். முன்கோபம் குறையும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். ஏழரை சனியில் பாத சனி நடந்து கொண்டிருப்பதால் மறதியால் விலை உயர்ந்த பொருள்களை இழக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    Advertisement

    கடன் நீங்கும்

    சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடனில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். கொடுத்து ஏமாந்து போன தொகையின் சிறு பகுதிக்கு கைக்கு வந்து சேரும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வேலை ஆட்கள் மூலமாக இருந்து வந்த தொந்தரவுகள் விலகும்.

    வழிபாடு

    உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சிக்கல்கள் நீங்கும். வேலைச் சுமைகள் தீர்ந்து உத்தியோகத்திலும் இந்த மாதம் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். பார்வையற்றவர்களுக்கு ஏதேனும் வகையில் உதவுவது, பனங்கற்கண்டு தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும்.

    English Summary

    Purattasi Palan: Kumbam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.