மீன ராசியினரே.. VIP அறிமுகம் முதல் பணவரவு வரை.. புரட்டாசி மாதம் எப்படி இருக்கப் போகுது?

  • புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினரே உங்கள் தன பாக்கியாதிபதியான செவ்வாய் ராசிநாதனான குரு பகவானுடன் இணைவதால் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் பண வரவு நன்றாக இருக்கும். மற்றவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பீர்கள். மனநிம்மதி தரக்கூடிய மாதமாக இருக்கும். சூரிய பகாவன் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கோபம் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    செல்வாக்கு உயரும்

    நடந்து முடிந்த சில கசப்பான சம்பவங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எல்லா விஷயத்திலும் நிதானமாக இருப்பது நன்மையைத் தரும். ராசிநாதன் குரு பகவான் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் விஐபிக்கள் அறிமுகமாவார்கள். எங்கு சென்றாலும் செல்வாக்கு உயரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    பணவரவு

    ஏழரைச் சனியில் ஜென்மசனி நடந்து கொண்டிருப்பதால் கெளரவத்தை இழந்துவிடக் கூடாது என்கிற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். சாப்பாட்டு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. 8 ஆம் இடத்தில் இந்த மாதம் முழுவதும் சுக்கிரன் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதாலும், 2 ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் பண வரவு அற்புதமாக இருக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த பொருள்கள் அனைத்தும் விற்பனையாகக் கூடிய அற்புதமான யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

    வழிபாடு

    கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது ஏற்றத்தைத் தரும். பச்சரிசி தானமாகக் கொடுப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Purattasi Palan: Meenam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.