புரட்டாசி மாதம் மேஷ ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, வேலை, பணவரவு என குவியும் அதிர்ஷ்டம்!

  • புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காணம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு மாதமாக உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் கேதுவுடன் சிக்கியிருந்ததால் குடும்பத்தில் செலவுகள் இருந்து கொண்டே இருந்திருக்கும். இப்போது சூரியன் 6 ஆம் வீட்டில் வந்து அமர்ந்திருப்பதால் தடைகள் அனைத்தும் விலகும். எல்லா விஷயங்களும் எளிமையாகவும், விரைவாகவும் முடியும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

    Advertisement

    குடும்பம்

    தீராத பிரச்சனைகளும் தீரும் காலகட்டமாக இருக்கும். சூரியனும், சனி பகவானும் பார்த்துக் கொண்டே இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்துவது நல்லது. சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும்.

    குழந்தை பாக்கியம்

    பிள்ளைகள் சந்தோஷம் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதன் செவ்வாய் குருவுடன் சேர்வதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு குரு மங்கள யோகம் இருக்கும். வீடு, மனை வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.

    Advertisement

    சொந்த வீடு யோகம்

    முன்பணம் கொடுத்து வீட்டை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம் போடுவீர்கள். சகோதரர் வகையில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோஷம் ஏற்படும். புதிய ஆடைகள், அணிகலன்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் குறையும். 10 ஆம் இடத்தை குரு, செவ்வாய் சேர்ந்து பார்ப்பதால் உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

    பரிகாரம்

    சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். புரட்டாசி மாதம் முழுவதும் நல்ல பலன்களை அனுபவிக்க நரசிம்மர் வழிபாடு நன்மையைத் தரும். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, சீருடை வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். மாதுளை பழம் தானமாகக் கொடுப்பது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Purattasi Palan: Mesham Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.