மிதுன ராசிக்கு பணவரவு கொட்டும்.. 30 நாட்கள் நடக்கும் அதிசயம்.. கடன் தீரும், செல்வாக்கு அதிகரிக்கும்

  • புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காணம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த செவ்வாய் ராசியில் இருந்து விலகுகிறார். 2 ஆம் இடத்தில் உள்ள குருவுடன் செவ்வாய் இணைகிறார். சோர்வு, களைப்பு, கோபம் போன்றவை பரிபூரணமாக நீங்கும். சிரித்த முகத்துடன் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் இந்த மாதம் முழுக்க மனதில் இருக்கும்.

    Advertisement

    பண வரவு

    செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகி 2 ஆம் இடத்தில் குருவுடன் இணைந்துள்ளதால் பண வரவு அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த தொகை கையில் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணங்களைக் கொடுப்பீர்கள். எல்லா வகையிலும் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக 4 ஆம் இடத்தில் இருக்கிறார். 5 ஆம் இடத்திலும் செல்கிறார்.

    செல்வாக்கு கூடும்

    ஆளுமைத் தன்மை அதிகரிக்கும். எதிர்ப்புகள் பரிபூரணமாக நீங்கும். உங்களுடைய வசதி வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் இந்த மாதம் முழுக்க 5 ஆம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    Advertisement

    லாபம் கொட்டும்

    வியாபார வகையில் இருந்து வந்த சிக்கல், பாதிப்புகள் பரிபூரணமாக விலகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கடைகளை புதுப்பிக்கக்கூடிய அற்புதமா அமைப்பு உள்ளது. வேலை ஆட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். உத்தியோகத்தைப் பொருத்தவரை இந்த மாதம் முழுவதும் செல்வாக்கு அதிகரிக்கும்.

    சுபநிகழ்வுகள்

    10 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் உத்தியோகத்தில் சிறிய சிறிய சலுகைகள் கிடைக்கும். ராசிநாதன் புதன் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரனுடன் அமர்வதால் இந்த மாதம் முழுக்க குடும்பத்தில் சிறிய சிறிய சுபச் செலவுகள், சுப நிகழ்வுகள் நடக்கக்கூடிய அற்புதமான யோகம் உண்டாகும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    வழிபாடு

    ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களைத் தரும். கால்களை இழந்தவர்களுக்கு உதவி செய்வது சகலவித நன்மைகளையும் தரும். உளுத்தம்பருப்பு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Purattasi Palan: Mithunam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.