ரிஷப ராசிக்கு செம லாபம்.. வெளிநாடு யோகம்.. இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்

  • புரட்டாசி மாத பலன்: கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காணம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த 1 மாத காலமாக ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருந்து நல்லவை எல்லாம் கொடுத்துக் கொண்டிருந்த சூரியன் இப்போது 5 ஆம் இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். இந்த மாதம் முழுக்க பரபரப்பாக இருப்பீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டாரம், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பத நல்லது. பூர்வீக சொத்துகள் தொடர்பான சிக்கிக் கொள்ளாமல் சிறிது விலகியிருப்பது நல்லது.

    Advertisement

    கவனம்

    தாய் வழி உறவினர்களால் சுபச் செலவுகள் ஏற்படும். உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் 6 ஆம் இடத்தில் மறைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயரை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் கவனம் தேவை.

    வெளிநாடு யோகம்

    உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் அமர்ந்து கொண்டு எல்லா சேமிப்பு, வரவுகளை காலி செய்து கொண்டிருந்த செவ்வாய் 3 ஆம் இடத்தில் நுழைந்துள்ளார். குரு மங்கள யோகத்தைக் கொடுப்பதால் இந்த மாதம் முழுவதும் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

    Advertisement

    வியாபாரம்

    சகோதரிக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். உங்கள் ராசிக்கு ஆதரவாக சனி பகவான் இருப்பதால் வியாபாரத்தில் அற்புதமான லாபம் காணப்படும். புதிய ஏஜென்சி எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும்.

    பரிகாரம்

    புதன் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். 6 ஆம் இடத்திற்கும் செல்வதால் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நன்மையைத் தரும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். திருநங்கைகளுக்கு உதவுவது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கோதுமை தானம் கொடுப்பது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.

    English Summary

    Purattasi Palan: Rishabam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.