துலாம் ராசியினரே ரெடியா?.. புரட்டாசியில் திடீர் யோகம்.. வீடு, பணம், பதவி எல்லாம் தேடி வரும்

  • புரட்டாசி மாத பலன்: துலாம் ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

    Advertisement

    கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்றிருப்பதால் அற்புதமான காலகட்டமாக இந்த மாதம் இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிர்ப்புகள் அனைத்தும் பரிபூரணமாக விலகும். எங்கு சென்றாலும் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். எதிரிகளைத் தாண்டி ஜெயிக்கும் அமைப்பு. வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.

    Advertisement

    திடீர் யோகம்

    வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் பெரிய பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் பாக்கியாதிபதியான குரு ராசிக்குள் வந்து அமர்வதால் திடீர் யோகம் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுத்து உறுதி செய்வீர்கள்.

    செல்வாக்கு கூடும்

    ராசிக்கு ஆதரவாக 10 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அந்நியோன்யம் அதிகரிக்கும். புரிதல் வர ஆரம்பிக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு, சேமிப்பு அதிகரிக்கும். செவ்வாய் சாதகமாக அமர்வதால் இந்த மாதம் முழுவதும் உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். எங்கு சென்றாலும் வெற்றி ஏற்படும். உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் நெருக்கமாவீர்கள்.

    Advertisement

    லாபம் கொட்டும்

    உங்கள் ராசிக்கு ஆதரவாக சூரியன் அமர்ந்திருப்பதாலும், 12 ஆம் வீட்டில் மறைவதாலும் பழைய பிரச்சனைகள், சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள், பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு முழுதாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு நிம்மதி ஏற்படும்.

    வழிபாடு

    மனதிற்குள் இருந்த படபடப்பு நீங்கும். நோய்கள் தொடர்பான பயங்கள் எல்லாம் விலகும். எல்லா வகையிலும் நல்லது நடக்கும் காலகட்டம். பிள்ளைகளால் முன்னேற்றம் ஏற்படும். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆதரவற்ற முதியோருக்கு உதவுவது ஏற்றத்தைத் தரும். துவரம்பருப்பு தானமாக கொடுப்பது நன்மையைத் தரும்.

    English Summary

    Purattasi Palan: Thulam Rasi natives may experience relief from long-standing problems, career progress, financial gains, property opportunities and improved family relationships during Purattasi month.