புரட்டாசி மாத பலன்: விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசியில் சூரியன் அமர்ந்திருக்கும் மாதமே புரட்டாசி மாதமாகும். இது கன்னியா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சூரியனுடைய வலிமை இந்த மாதத்தில் குறைந்து காணப்படும். வெயிலும், மழையும் மாறி மாறி காணும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.
கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய சூரியன் கன்னி ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வேலை, தொழிலில் ஏற்படும் மாற்றங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசிநாதனான செவ்வாய் கடந்த சில மாதங்களாக பலவீனமாக மறைந்திருந்தார். இதனால், உடல்நலக் குறைவு, ஓய்வின்மை, அலைச்சல்கள், அடுத்தடுத்த செலவுகள் போன்றவை ஏற்பட்டிருக்கும். ராசிநாதன் செவ்வாய் தற்போது குருவுடன் சேர்ந்துள்ளதால் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இரப்பீர்கள். மனதிற்குள் இருந்த படபடப்புகள் விலகி, சந்தோஷமும், சாந்தமும் ஏற்படும். எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டக்கூடிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஆதரவாக குரு பகவான் அமர்ந்து உங்களை பார்ப்பதால் கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சூரியன் லாப ஸ்தானத்தில் வந்து அமர்ந்துள்ளதால் இந்த மாதம் முழுவதும் வியாபாரம் அமோகமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். மூத்த சகோதர வகையில் சில உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள், விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை சீக்கிரமாக முடியும். வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் கிடைப்பது, லோன் கிடைப்பது போன்ற அமைப்பு கிடைக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள், ரத்தினங்கள், புதிய நகைகள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். வண்டி, வாகனம் புதிதாக வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் இந்த மாதம் முழுக்க அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்வது சகலவித நன்மைகள் கிடைக்கும். தூய்மைப் பணியாளர்களுக்கு உதவுவது, வாழைப்பழம் தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்.விருச்சிக ராசி பலன்
அனுகூலம்
லாபம் கொட்டும்
வீடு, நகை வாங்கும் யோகம்
வழிராடு