கும்பம் ராசியினரே உஷார்.. பேச்சில் கவனம்... தொழிலில் அதிர்ஷ்டம் காத்திருக்கு

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. கன்னி ராசிக்குள் வரும் சூரியனால் புரட்டாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. அந்த வகையில், இந்த புரட்டாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம் ராசி

    கும்பம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் அதீத கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம். இருசக்கர வாகனம், சைக்கிள், கார் என பயணங்கள் மேற்கொள்வோர், தொலைதூரப் பயணம் மேற்கொள்வோருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அநாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். நல்ல தூக்கத்திற்கான பயிற்சி, உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    கோபம் வேண்டாம்

    கோபம், கத்துவது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. குறுகிய வட்டத்துக்குள் இருப்பது இந்த மாதத்தில் நன்மையைத் தரும். அஷ்டமத்தில் இருக்கும் சூரியன் 2 ஆம் இடத்தில் இருக்கும் சனியைப் பார்ப்பதாலும், பகை வீட்டில் இருந்து சூரியன் பார்ப்பதாலும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் தேவை. உங்களுடை பேச்சு உங்களுக்கு எதிராகவே திரும்பும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    முன்னேற்றம்

    சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பழைய நோய்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. பண வரவுக்கு குறைவு இருக்காது. தொழிலில் அதீத நன்மைகள் ஏற்படும். அதீத கெளரவம் பார்க்காமல் இருப்பது நல்லது.

    வழிபாடு

    மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஆவேசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. யாரையும் அசாதாரணமாக எண்ணுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். நரம்பு, படபடப்பு, ரத்த அழுத்தம், கண்கள் பாதிப்பு உள்ளவர்கள் மிகுந்த கவனம் தேவை. மருந்து மாத்திரைகளைத் தவிர்க்காமல் இருப்பது நன்மை. புதன்கிழமைகளில் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Purattasi Matha Palan: Purattasi Month 2026 brings Kumbam Rasi natives promising career growth, financial gains, respect, new responsibilities and support.