Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துவுள்ளது. கன்னி ராசிக்குள் வரும் சூரியனால் புரட்டாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. அந்த வகையில், இந்த புரட்டாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். மீனம் ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதத்தில் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையிலும், கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புரட்டாசி என்பதால் நல்லவை செய்யக்கூடாது என்பது இல்லை. எல்லா விதமான நல்ல விஷயங்களையும் செய்யலாம். ஏழைகளுக்கு உணவு, தானம் அளிப்பது நன்மையைத் தரும். நரசிம்மருக்கு பானக தானம் செய்வது, அதற்கான பொருள்களை வாங்கிக் கொடுப்பது நன்மையைத் தரும். பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். வாசனையான பொருள்களை உங்களைச் சுற்றி வைப்பது நன்மையைத் தரும். வாசனை திரவியங்களால் அலர்ஜி ஏற்படும் என்பதால் இயற்கையாக நறுமணம் தரக்ககூடிய பொருள்களை வைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து, இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும். பிள்ளைகள் வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும், வேகத்தை தவிர்ப்பது நல்லது என்றும் கண்டிப்பது நன்மையைத் தரும். குலதெய்வக் கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் சென்று வருவது சுபிக்ஷத்தை ஏற்படுத்தும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி ஏற்பட அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மையை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகளில் விநாயகர், பெருமாள் தாயார், ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.மீனம் ராசி
அனுகூலம்
லாபம் அதிகரிக்கும்
கவனம்
வழிபாடு