Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம் பார்வையாக உள்ளது. எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களுக்கான அனைத்து நல்ல விஷயங்களும், எதிர்பார்த்த விஷயங்களும் நடைபெறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அற்புதமாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது நன்மை பயக்கும். சோதனைகள் குடும்பத்தில் குறையும். நல்ல அனுகூலங்கள் காணப்படும். நிறைய ரிஷப ராசியினர் வீட்டில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இன்டீரியர் டெக்கரேட் செய்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழந்த பெருமைகள் எல்லாம் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எதிரிகளை வெற்றி பெறும் யோகம் ஏற்படும். இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் தீரக்கூடிய காலகட்டம். நல்லவையும், சந்தோஷமும் கலந்து வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் அதீதமான கவனத்தோடு இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். முதுகுத் தண்டுவடத்தில் அதீத கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமையில் பெருமாள் வழிபாடு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.ரிஷபம் ராசி பலன்
சுப காரியங்கள்
வெற்றி மேல் வெற்றி
முன்னேற்றம்