Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். சிம்ம ராசியினருக்கு கோபம், இயலாமை ஏற்படும். உங்கள் நண்பர்களுடன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வது நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் பதட்டம், கோபம் ஏற்படும். கணவன், மனைவியால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர் பெரியவர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பெற்றோர்களுக்கு கெளரவம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மேலதிகாரிகளால் தொந்தரவும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய கூட்டாளிகள் உங்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத உதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இல்லத்தரசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களை ஆதரிப்பது போல பேசி உறவுக்காரர்கள் தேவையில்லாத குழப்பத்துக்கு ஆளாக்குவார்கள் என்பதால் கவனம் தேவை. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் வாதங்களைத் தவிர்க்க வேண்டும். உறவுகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ரத்த பந்த உறவுகளால் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், படபடப்பில் கவனம் தேவை. விநாயகர், அனுமன் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.சிம்மம் ராசி பலன்
பெயர், புகழ்
திடீர் அதிர்ஷ்டம்
வழிபாடு