துலாம் ராசிக்கு புரட்டாசியில் பண மழை.. ஆனால் இந்த விஷயத்தில் உஷார்

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று துலாம் ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே துலாம் மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் துலாம் பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தமப் பார்வையாக உள்ளது.

    எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடக்கூடிய அற்புதமான காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவுக்காரர்கள், நண்பர்கள் எல்லோரையும் நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. தற்பெருமை பேசுவதைத் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    அனுகூலம்

    நிறைய நன்மைகள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். உங்களுக்கு மேலிருப்பவர்களை நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது. உங்களுக்கு கீழ் இருப்பவர்களை நினைத்தும், நாம் இப்போது எவ்வளவு நல்ல நிலைமையில் என்றிருக்கிறோம் என்று யோசிப்பது நன்மை பயக்கும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருப்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வீண் வாதம் வேண்டாம்

    தாய், தந்தை வழி உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் வாகனங்களில் மாற்றங்களைச் செய்வீர்கள். 10 ஆம் இடத்தில் இருக்கும் குரு தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகம், குடும்பத்தை கெடுக்கும் அமைப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. வீண் வாதங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

    வழிபாடு

    பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். துணை உங்களுக்கென்று இருப்பார்கள். அவர்களைப் பிடித்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். முதுகுத் தண்டுவடம், சர்க்கரை, ரத்த அழுத்தத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Purattasi Month 2026 brings Thulam Rasi natives promising career growth, financial gains, respect, new responsibilities and support from unexpected sources.