விருச்சிகம் ராசி: தடைகள் தவிடுபொடி... புரட்டாசி மாதத்தில் தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துவுள்ளது. கன்னி ராசிக்குள் வரும் சூரியனால் புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

    புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிக ராசி

    விருச்சிக ராசியினருக்கு ராசிநாதனான செவ்வாய் பகவான் நீச்சமாக இருப்பதால் கவனம் தேவை. உறவுகளிடம் வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் என்ற பெயரில் சிலர் துரோகம் செய்வார்கள். குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

    சுபகாரியம்

    இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம் ரீதியாக எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் ஏற்படும். லாபம், சந்தோஷம் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கக்கூடிய நல்ல அமைப்பு ஏற்படும்.

    Advertisement

    தொழிலில் ஜாக்பாட்

    தொழில் அமைப்பு அற்புதமாக இருக்கும். இன்டீரியர் டெக்கரேஷன்களைச் செய்வீர்கள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் நல்ல அனுகூலங்களும், முன்னேற்றமும் ஏற்படும். தனிப்பட்ட பூமி சார்ந்த விஷயங்கள், தொழில் விஷயங்கள் யோக பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    வாக்குவாதம் வேண்டாம்

    பிள்ளைகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மையைத் தரும். கையெழுத்து போடுவதற்கு முன்பு ஆவணங்களை ஒருமுறைக்கு, இருமுறை படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. மற்ற அனைத்து விஷயங்களிலும் அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். தடைகளைத் தவிடு பொடியாக்கக்கூடிய காலகட்டம்.

    Advertisement

    வழிபாடு

    சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். ரத்தத்தில் பரவும் நோய், அடிபடுவதில் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகப் பெருமான் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் தரும். ஏழை, எளியோருக்கு உணவு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.

    English Summary

    Purattasi matha palan: Purattasi Month 2026 brings Viruchigam Rasi natives promising career growth, financial gains, respect, new responsibilities and support.