புரட்டாசி மாதம் பிறந்தாச்சு.. இந்த 12 ராசிக்கும் என்ன பலன்? யாருக்கு பணம், பதவி, திருமண யோகம்?

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்துள்ளார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

    அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம்

    மேஷம் ராசியினருக்கு யோகமான மாதமாக இருக்கும். பொருளாதாரம் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். பெருமாள் வழிபாடு நன்மையைத் தரும்.

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு பூர்வீக சொத்துகள் மூலமாக லாபம் வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்றம் பெறுவீர்கள. குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். கடன் பிரச்சனை நீங்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது.

    மிதுனம்

    மிதுன ராசியினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். மதிப்பு கூடும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமண யோகம் ஏற்படும். பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

    Advertisement

    கடகம்

    கடக ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நிதி சார்ந்த தொழில் செய்வோருக்கு ஏற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. சிவன் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.

    சிம்மம்

    சிம்ம ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை மேம்படும். செல்வாக்கு கூடும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சூரிய வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    கன்னி

    கன்னி ராசியினருக்கு நிரந்தர வேலை கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பங்குச் சந்தை முதலீடுகலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    துலாம்

    துலாம் ராசியினருக்கு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்பது நல்லது. பயணங்களால் நல்ல லாபமும், பண வருமானமும் ஏற்படும். பண வரவுக்கு ஏற்ப சுப விரயங்களும் ஏற்படும் காலகட்டம். தொழிலில் லாபம் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நன்மையைத் தரும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் லாபம் கூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஏற்படும். பேச்சிற்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். வீடு வாங்கும் யோகம் உண்டு. முருகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    தனுசு

    தனுசு ராசியினருக்கு தொழில் தொடங்க ஏற்ற காலம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நகை வாங்கும் யோகம் உண்டு. பதவிகள் தேடி வரும். வீடு, நிலம் வாங்கும் அமைப்பு. வண்டி, வாகனங்கள் வாங்க ஏற்ற காலம். கல்விச் செலவுகள் செய்வீர்கள். கடன் வாங்கும் அமைப்பு. வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    மகரம்

    மகர ராசியினர் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மீறி கொடுத்தால் பணம் திரும்ப வராது. புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கம். திருமணம், சுபகாரியங்கள் நடக்கும். காலபைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

    கும்பம்

    கும்ப ராசியினர் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் எச்சரிக்கை தேவை. ஆனால், நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு கூடும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.

    மீனம்

    மீன ராசிக்காரர்களுக்கு அரசுப் பதிவயில் இருப்பவர்களுக்கு அற்புதமான மாதம். பதவி உயர்வு தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் லாபம் ஏற்படும். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் ஏற்படும். பெருமாள் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.

    English Summary

    Purattasi Month 2026 brings varied opportunities in career, business, finances, marriage, property and family life for all 12 Rasis, along with specific cautions and spiritual remedies.