Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் பிறந்துவுள்ளது. புரட்டாசி மாதத்தில் உலகில் என்ன விதமான மாற்றங்கள், வரப்போகும் பேராபத்துகள் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முப்படைத் தளபதிகள், ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில், பயணங்களின் போது மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. சீனா, நேபாளம், இந்தியா, இமயமலைப் பகுதிகள், கேரளா, வடஇந்தியா, தென் இந்தியா, மகாராஷ்டிரம் பகுதிகளில் இயற்கை பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குஜராத், பாம்பே, கடல் அருகில் இருக்கும் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய ரயில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது, விமானிகள் காப்பாற்றும் சூழ்நிலை உள்ளது. விமானிகள், பணிப் பெண்கள், ஊழியர்களை கடும் பரிசோதனை செய்வதற்கான நிர்ப்பந்தம் ஏற்படும். தொடர் வண்டிப் பயணங்கள், பேருந்துகள், தரைமார்க்கத்தில் சுற்றுலா செல்லும் பொதுமக்கள், பள்ளி வாகனங்கள் போன்றவை பணங்களின்போது பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புரட்டாசி மாதத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி மஹாளய பக்ஷம் ஆரம்பிக்கவுள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி மஹாளய அமாவாசை தினமாகும். இந்த தினத்தில் ஏழை, எளியோருக்கு, பசு மாடுகளுக்கு உணவு தானமாக அளிப்பது நன்மை பயக்கும். அனாதை ஆசிரமங்களுக்கு அரசி வாங்கிக் கொடுப்பது நன்மையைத் தரும். அக்போடபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அம்மனுடைய சக்தியைப் பெறுவதற்கு அதற்கான வழிபாடுகளை வீட்டில் செய்வது நன்மை பயக்கும். புரட்டாசி மாத்தில் சில கிரகங்கள் வக்கிரமடைய உள்ளதால் கவனம் தேவை. புரட்டாசி மாதத்தில் பலவிதமான எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெறும் என்று பஞ்சாங்கத்தில் உள்ளது. இயற்கை சேதாரங்கள், நீர்நிலைகள், அணைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கடல், ஆறு, ஏரி போன்ற பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் காட்டுகிறது. அரபிக்கடலில் பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கும், வெடி சத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. கடல் சீற்றங்களால் ராட்சத அலைகள் எழும். திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடல் உள்வாங்குதல் நடைபெற்றாலும் பெரிய சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். பாகிஸ்தானில் பெரும் தீ விபத்துகள் ஏற்படும். திருப்பதி, திருவண்ணாமலை, சபரிமலை, உடுப்பி பகுதிகளில் இருக்கக்கூடிய கோயில்களில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக மழைக்கான வாய்ப்புள்ளது. நீர்களை சேமிப்பதற்கு உரிய வழிமுறைகள் உள்ளதால் ஏராளமான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய கொள்ளை சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னை கிழக்கில் உருவாகும் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவதற்கான வாய்ப்புள்ளது. கடலில் செல்லும் கப்பல்கள், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களில் இடி விழுவதற்கான வாய்ப்புள்ளது. இடி தாங்கிகள் சரியாக உள்ளனவா என சோதனை செய்து கொள்வது நல்லது. சுற்றுலா கப்பல்கள் பயணத்தின்போது விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. தொற்றுநோய்களால் பெரும் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, கால்நடைகள், ஏரி மீன்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு தொற்று நோய் பாதிப்பு உருவாகும் சூழல் அதிகம் உள்ளது. வங்கிகள், ஏடிஎம் களில் பெரும் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. புதன் வக்கிரமடைய உள்ளதால் மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உணவு தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். கல்வி நிலையங்களில் பாதுகாப்பு விஷயங்களை ஏற்படுத்துவது நல்லது. அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும். புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்குரிய மாதமாகும். கோவிந்த நாமம் சொல்வது, அனுமனை மனதார வழிபாடு செய்வது, மகாலட்சு வழிபாடு, கனகதார ஸ்தோத்திரங்களைக் கேட்பது, விஷ்ணு சஹஸ்ஹர நாமத்தைக் கேட்பது சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். பெருமாள் நாம கீர்த்தனைகளை கேட்பது நன்மையைத் தரும்.தலைவர்கள் கவனம்
எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு
விஷேசமான தினங்கள்
பஞ்சாங்கம் சொல்வது என்ன
ஆபத்து காத்திருக்கு
வக்கிரமாகும் புதன்
வழிபாடு