புரட்டாசி மாதம் யாருக்கு பொற்காலம்?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு குவியுமா அதிர்ஷ்டங்கள்?

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

    எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு மிகுந்த கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். அரசுத் துறை, அரசாங்கத் துறையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நீசமாக இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

    Advertisement

    படிப்புத் தடை, உத்தியோகத் தடை, தொழில் தடை, வியாபாரத் தடை நீங்குவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக தீராத ஒரு பிரச்சனை தீரக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அபிராமி அந்தாதியில் 50, 40, 54, 75 பாடல்களை படிப்பது மேன்மையைத் தரும். தொழிலில் பெரிய முதலீடுகளை செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் யோக பலத்தைக் கொடுக்கும்.

    குடும்பத்திலும், தொழிலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 36 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எல்லா காரியங்களிலும் ஏற்படும். தொழில் அற்புதமான முன்னேற்றங்கள் காணப்படும். ஏற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பெரிய பெரிய வெற்றிகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். யாரிடம் பேசினாலும் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    சிம்ம ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு புரட்டாசி மாதம் அற்புதமாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, தலைவலி, நரம்பு, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்த்து நிதானமாக செயல்பட வேண்டும். நிறைய நன்மைகள் ஏற்படும். சனிக்கிழமைகளில் பிள்ளையார், பெருமாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

    Advertisement

    இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள், யார் நல்லவர், கெட்டவர் என்ற தன்மை, பதட்டம் போன்றவை குறையும். சந்தோஷமான இடங்களுக்குச் செல்வீர்கள். தெய்வ காரியங்களுக்குச் செல்வீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த சங்கடங்கள் தீரும். பயணங்கள் அனுகூலத்தைத் தரும். துணையிடம் சிறு சிறு மனக் கசப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உள்ளூர், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நிறைய பொருள் சேர்க்கை உண்டாகும்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். உங்கள் ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த மாதமே கன்னி மாதம், புரட்டாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி முழுவதும் அல்லது புதன்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது ஆனந்தத்தை தரும். வியாழக்கிழமையில் விநாயகர், பெருமாள் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    மேலதிகாரிகள், தொழில், வியாபாரத்தில், படிப்பில், வாகனங்களில் செல்லும்போது, குடும்ப விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செல்போனில் பேசும் விஷயங்கள், அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது, வீடியோ காலில் பேசுவது போன்றவற்றில் மிகுந்த உஷாராக இருப்பது நல்லது.

    தெரியாத நபரிடம் இருந்து வீடியோ கால் வந்தால் அதனை அட்டென்ட் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத லிங்க்குகளுக்குள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. போனில் சொல்வதை நம்பாமல் இருப்பது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு ஏற்படும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதிர்ஷ்டங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Purattasi matha palan: Purattasi Month 2026 brings career progress, financial gains, family happiness and unexpected opportunities for Kadagam, Simmam and Kanni Rasi, while also advising caution in key areas.