மகரம், கும்பம், மீனம் ராசிக்கு புரட்டாசியில் அதிர்ஷ்டம்?.. பணவரவு, தொழில் வளர்ச்சி எப்படி?

  • Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

    Advertisement

    கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

    எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    மகரம் ராசி

    மகரம் ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சமாகியும், குரு உச்சமாகவும் இருப்பதால் குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உறவுகளுக்கும், உங்களுக்கும் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால், அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். குரு பார்வையில் இருப்பதால் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆக்ரோஷப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் மன அழுத்தத்திற்கு ஆளாவது, மன வருத்தப்படுவது, அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது, அவர்களுடைய நட்பு போய்விடுமான என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    நட்பு, உறவு எந்த உறவாக இருந்தாலும் கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள், நீங்களாகவே தூய மனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். சனி விலகி இருப்பதாலும், சனி 3 ஆம் இடத்தில் அமர்ந்து சூரியப் பார்வையில் படுவதாலும் உங்களுக்கு அற்புதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் தாயார் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    கும்பம் ராசி

    கும்பம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் அதீத கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம். இருசக்கர வாகனம், சைக்கிள், கார் என பயணங்கள் மேற்கொள்வோர், தொலைதூரப் பயணம் மேற்கொள்வோருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அநாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். நல்ல தூக்கத்திற்கான பயிற்சி, உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

    கோபம், கத்துவது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. குறுகிய வட்டத்துக்குள் இருப்பது இந்த மாதத்தில் நன்மையைத் தரும். அஷ்டமத்தில் இருக்கும் சூரியன் 2 ஆம் இடத்தில் இருக்கும் சனியைப் பார்ப்பதாலும், பகை வீட்டில் இருந்து சூரியன் பார்ப்பதாலும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் தேவை. உங்களுடை பேச்சு உங்களுக்கு எதிராகவே திரும்பும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பழைய நோய்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. பண வரவுக்கு குறைவு இருக்காது. தொழிலில் அதீத நன்மைகள் ஏற்படும். அதீத கெளரவம் பார்க்காமல் இருப்பது நல்லது. புதன்கிழமைகளில் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மீனம் ராசி

    மீனம் ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதத்தில் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையிலும், கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

    புரட்டாசி என்பதால் நல்லவை செய்யக்கூடாது என்பது இல்லை. எல்லா விதமான நல்ல விஷயங்களையும் செய்யலாம். உணவு தானம் அளிப்பது நன்மையைத் தரும். வாசனையான பொருள்களை உங்களைச் சுற்றி வைப்பது நன்மையைத் தரும். பெற்றோர் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து, இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும்.

    தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகளில் விநாயகர், பெருமாள் தாயார், ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Purattasi rasi palan: Purattasi Month 2026 brings career progress, financial gains, auspicious events and property opportunities for Magaram, Kumbam and Meenam Rasi, while calling for caution in travel, health and family matters.