Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது. எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு திங்கள்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். முதுகு தண்டுவட பாதிப்பு, வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யோசித்துத் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. மயக்கம் வரும் வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், குடும்பம் என எங்கு என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது அற்புதத்தை தரும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளில் அதீத கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எந்தவிதமான குழப்பம் ஏற்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், வியாபாரம், பிள்ளைகளுக்காக இடமாற்றம் உள்ளிட்ட எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த கஷ்டம் பரிபூரண நிவர்த்தியாகும். செல்வாக்குகள் கூடும். துர்க்கை வழிபாடு, துர்க்கை கவசம் கேட்பது நன்மையைத் தரும். விருச்சிக ராசியினருக்கு ராசிநாதனான செவ்வாய் பகவான் நீச்சமாக இருப்பதால் கவனம் தேவை. உறவுகளிடம் வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். பெற்றோரின் ஆரோக்கியம் கவனம். நண்பர்கள் என்ற பெயரில் சிலர் துரோகம் செய்வார்கள். குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழில், உத்தியோகம் ரீதியாக எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் ஏற்படும். அசையும், அசையா பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கக்கூடிய நல்ல அமைப்பு ஏற்படும். தொழில் அமைப்பு அற்புதமாக இருக்கும். இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்வீர்கள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் நல்ல அனுகூலங்களும், முன்னேற்றமும் ஏற்படும். தனிப்பட்ட பூமி சார்ந்த விஷயங்கள், தொழில் விஷயங்கள் யோக பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. கையெழுத்து போடுவதற்கு முன்பு ஆவணங்களை ஒருமுறைக்கு, இருமுறை படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. மற்ற அனைத்து விஷயங்களிலும் அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும். செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு முன்னேற்றங்களை தரும். தனுசு ராசியினருக்கு இந்த புரட்டாசி மாதத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட பயணங்கள் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். துணைக்கு அற்புதமான அமைப்பு உண்டாகும். நல்ல வாழ்க்கை அமைப்பு ஏற்படும். கெளரவம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக சந்தோஷமும், முன்னேற்றமும் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கு தடைப்பட்டிருந்த விஷயங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கி, பணவரவு ஏற்படும். கஷ்டங்கள், சிக்கல்கள் நீங்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். புதிய தொழில் மாற்றம், கூட்டாளிகள் மாற்றம் ஏற்படும். படிப்பு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். நீங்கள் படிக்க விரும்பிய துறைகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களால் ஆதாயம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். புதன்கிழமை விநாயகர், பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.துலாம் ராசி
விருச்சிக ராசி
தனுசு ராசி