ராகு கேது பெயர்ச்சி: நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் பெயர்ச்சி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறது, முன்னேற்றத்தை ஏற்படுத்துமா, கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயணித்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
சிம்ம ராசியில் இருந்த கேது பகவான் கடக ராசிக்குள் வருகிறார். கும்ப ராசியில் இருந்த ராகு பகவான் மகரம் ராசிக்குள் வருகிறார். இது உலக அளவிலும், தனிமனித வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு தொழில், குடும்பம், வேலை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். கடக ராசியினருக்கு இதுவரை 2 ஆம் இடத்தில் இருந்து வந்த கேது பகவான் ராசிக்குள் வருகிறார். அஷ்டமத்தில் இருந்த ராகு பகவான் 7 ஆம் இடத்துக்கு வருகிறார். இந்த காலகட்டம் உங்களுக்கு மாற்றத்தைக் கொடுத்தே தீரும். எனவே, விழிப்போடு இருக்க வேண்டிய காலகட்டம். மிக விரைவான மாற்றங்கள் ஏற்படும். ராசியில் கேது இருப்பதால் உங்களுடைய குடும்பம், விவசாயம், நிலம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்துக்கு கடக ராசியினர் முக்கியத்துவம் கொடுப்பது நன்மை பயக்கும். 7 இல் இருக்கும் ராகு நட்பு விஷயத்தில் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். 7 இல் இருக்கும் ராகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை நீங்கள் பழகும் நண்பர்களிடத்தில் ஏற்படுத்தும். நல்லவர்கள் போல நடிக்கக் கூடியவர்கள் உங்களை சூழ்ந்திருப்பார்கள். உங்களை அவர்கள் கழுத்தறுக்கும் சூழ்நிலை ஏற்படும். வரும் ஒன்றரை ஆண்டுகளில் நண்பர்களின் உண்மை முகம் உங்களுக்கு புலப்படும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது ஏற்றத்தைத் தரும். குடும்பத்துக்கு மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என முக்கியத்துவம் கொடுப்பது முன்னேற்றத்தைத் தரும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பிரிவது, குடும்ப உறுப்பினர்கள் இழப்பு போன்றவை ஏற்படும் அமைப்புள்ளது. குடும்ப அமைப்பை இறுகப் பற்றுவது வெற்றியைத் தரும். ராசியில் கேது அமரும் காலத்தில் உங்களை நீங்களே சுருக்கிக் கொள்வீர்கள். வம்பு, வழக்குகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதுநாள் வரை இருந்த வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தற்போது வரை உங்கள் ராசிக்கு ஆதரவாக இருந்து வந்த குரு பகவான், வரும் ராகு கேது பெயர்ச்சியில் மே மாதத்திற்குப் பிறகு தன ஸ்தானத்திற்குச் செல்கிறார். பண வரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் சப்போர்ட் கிடைக்கும். ராகு பகவானுடைய அமைப்பு பாக்கிய ஸ்தானத்துடன் தொடர்பு உடையதால் வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் டெக்னிக்கல், ரோபோடிக் சம்பந்தப்பட்ட படிப்புகள் எடுத்து படிப்பது பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும். அலர்ஜி, இதயம் தொடர்பான பாதிப்புள்ளவர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில்நுட்ப மாற்றங்களை புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய கோர்ஸ்களை எடுத்து படிப்பது ஏற்றத்தைத் தரும். எச்சரிக்கையாகவும், நண்பர்களிடம் கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. கோபத்தை தவிர்க்க வேண்டும்.கடகம் ராசி பலன்
நட்பினால் ஏமாற்றம்
முன்னேற்றம்
திடீர் மாற்றம்
பணவரவு
ஆரோக்கியம்