ராகு கேது பெயர்ச்சி: 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சிம்ம ராசியில் இருந்த கேது பகவான் கடக ராசிக்குள் வருகிறார். கும்ப ராசியில் இருந்த ராகு பகவான் மகரம் ராசிக்குள் வருகிறார். இது உலக அளவிலும், தனிமனித வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு தொழில், குடும்பம், வேலை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் கடக ராசியாகிய சுக ஸ்தானத்துக்கு வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்த ராகு பகவான் இப்போது தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 10 ஆம் இடத்தில் ராகு வருவது மிகப்பெரிய யோகத்தை ஏற்படுத்தும். நல்ல தொழில் வளர்ச்சி உண்டாகும்.
குடும்பத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். நிதி சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் அஷ்டம ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வையின் இருப்பதால் விஞ்ஞானிகள் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது, செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்துவது போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டு. வெளிநாட்டில் ஏற்கனவே உள்ளவர்கள் அங்கிருந்து வேறொரு வெளிநாடு செல்வது அல்லது தாய்நாட்டிற்கே திரும்பக்கூடிய அமைப்பு உள்ளது. வேலையில் வரக்கூடிய புதிய தொழில்நுட்பம், மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு இந்த ஒன்றரை வருடம் சாதகமாக இருக்கும். உதாரணமாக சஃப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு புதிய அப்டேட்டுகளுக்கு தகுந்தாற்போல மாறுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு 10 இல் வரும் ராகு பிரம்மண்டமான வளர்ச்சியைக் கொண்டு வரும். இதுநாள் வரை உங்கள் அரசியல் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அடுத்தடுத்து சிந்தனைகள் பெருகும். ஒரு நிறுனத்தை நடத்தி வருபவர்கள், இன்னொரு நிறுவனம் தொடங்கலாமா என்கிற எண்ணம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் மாற்றத்தை நோக்கிச் செல்வீர்கள். எதிர்பார்க்கும் அதிக சம்பளம் இந்த ராகு கேது பெயர்ச்சியில் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. சட்டப்பூர்வமற்ற விஷயங்களில் ஈடுபடாமல் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்மீகம் மற்றும் விவசாயிகள் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவோருக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும்.வெளிநாடு யோகம்
மாற்றம்
முன்னேற்றம்
அதிக சம்பளம்
பணவரவு