ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மிதுனம் ராசியினருக்கு 9 ஆம் இடத்தில் இருந்த ராகு 8 ஆம் இடத்திற்கு வருகிறார். 3 ஆம் இடத்தில் இருந்த கேது 2 ஆம் இடத்திற்கு வருகிறார். முயற்சிகளில் தடைகள் ஏற்படும். ஆனால், திடீர் அதிர்ஷ்ம் ஏற்படும். எல்லா விதத்திலும் ஏற்றங்கள் காணப்பட்டாலும் வேறு ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக செல்வது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளை நினைத்து கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். உடல் ரீதியாக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டமும், பெரும் வெற்றியும், புகழும் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி, டிரேடிங், வாங்கி விற்பது போன்றவற்றால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். யோக பலன்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்திலும், தொழிலிலும் எதிர்பார்க்காத பலவித நன்மைகள் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் தீரும். திருமணத்தில் பாதிப்பு இருந்து மறுமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மறுமணம் நடக்கும் அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விடுவதை தவிர்ப்பது நல்லது. இன்னொரு வேலை கிடைக்கும் வரை மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். வண்டிகளில் செல்லும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடம் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பைரவர் காயத்ரியை தினந்தோறும் படிப்பது, கேப்பது நன்மை பயக்கும். தெருநாய்களுக்கு உணவளிப்பது நல்லது.மிதுனம்
முன்னேற்றம்
ராகு கேது பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்
ஆரோக்கியம்
யோக பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி 2026: ரிஷப ராசிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தொழிலில் வரும் மாபெரும் வெற்றி
கவனம்
வழிபாடு