ராகு கேது பெயர்ச்சி 2026: ரிஷப ராசிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தொழிலில் வரும் மாபெரும் வெற்றி

  • ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

    Advertisement

    கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

    ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம்

    ரிஷபம் ராசியினருக்கு 10 ஆம் இடத்தில் இருந்த ராகு பகவான் 9 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். 4 ஆம் இடத்தில் இருந்த கேது 3 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். திருப்பதி திருமலையில் ஓரிரவு தங்கி வழிபாடு செல்வது ஏற்றத்தைத் தரும். முதுகு, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

    ஆன்மீகம்

    எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நன்மைகளை ஏற்படுத்தும். சுப விரயங்கள் அடுத்தடுத்து செய்வீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். எதிரிகள் பலம் இழந்து போவார்கள். எதிரிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தெய்வமே கிடையாது என்று சொன்னவர்கள் கூட மாலை போடும் அளவுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    ஆச்சரியமான முன்னேற்றங்கள் காணப்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். மன அழுத்தங்கள் தீரும். தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சனிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். அரிசி, கோதுமை, காய்கறிகள் உணவாகக் கொடுக்கலாம்.

    பணவரவு

    எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். பொருளாதார்த்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைகள் தவிடு பொடியாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். முருகர் வழிபாடு சகலவித நன்மைகளையும் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.

    English Summary

    Rahu ketu peyarchi 2026: In this astrological article, you can learn in detail about the effects of the Rahu-Ketu transit on the Rishabam (Taurus) zodiac sign, as well as the remedies and matters that require caution.