ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தனுசு ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் இருந்த ராகு 2 ஆம் இடத்துக்கும், 9 ஆம் இடத்தில் இருந்த கேது 8 ஆம் இடத்துக்கும் வருகின்றனர். புற்றுள்ள அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வீட்டின் அருகில் இருக்கும் புற்றுள்ள அம்மன் கோயில்கள், பண்ணாரி அம்மன், அங்காளம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு அம்மன், சமயபுரத்தாள், மேல்மலையனூர் என அம்மன் தாயை வழிபாடு செய்வது பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும். கோளார் பதிகத்தை தொடர்ந்து சொல்வது, கேட்பது அற்புதமான அமைப்பை ஏற்படுத்தும். 2 இல் ராகு, 8 இல் கேது இருந்தாலும் திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யங்கள் அதிகரிக்கும். மூட்டு வலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சர்க்கரை, ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உறவுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது, சிறு தேக ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது யோக பலன்களைப் பெற்றுத் தரும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். 2 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வார்த்தைகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வலுக்கலான இடங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் இப்படி என்று கூறுவதைத் தவிர்த்துவிட்டு மற்றவர்கள் எப்படி இருந்தாலும் உங்களுக்கு தெய்வ பலம் நன்மையைத் தரும். விநாயகர், துர்கை வழிபாடு பெரும் சந்தோஷத்தைத் தரும். பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்றங்கள் அதிகளவில் கிடைக்கும். அந்த காலகட்டம் வரை பொறுமை காப்பது நன்மை பயக்கும்.தனுசு
ஆரோக்கியம்
யோக பலன்கள்
தெய்வ பலம்
வழிபாடு