ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கும்பம் ராசியினருக்கு 1 ஆம் இடத்தில் இருந்த ராகு பகவான் 12 ஆம் இடத்துக்கு வருகிறார். 7 ஆம் இடத்தில் இருந்த கேது 6 ஆம் இடத்திற்கு வந்து மறைகிறார். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள அக்னீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். அந்தக் கோயிலில் பூஜை செய்து, வணங்குவது நன்மையைத் தரும். எதிரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், குடும்பத்தில் கோபம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். வெளியூர், வெளிநாடு, விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக தங்க நகைகளை வாங்கிக் குவிக்கக்கூடிய யோகம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை, நிலம் சேர்க்கை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 72 வயது வரை இருக்கக்கூடிய முதியவர்கள் வரை அற்புதமான, அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அதற்கு மேலான வயதினர் நடக்கும்போதும், ஆரோக்கியத்திலும், வெளிவட்டாரம், பயணங்கள் போன்றவற்றில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும். அரசியலில் உள்ள இளம் வயதினர் திடீரென பெரும் பொறுப்புகளுக்கு வரக்கூடிய காலகட்டம். இளம் தொழிலதிபர்கள் உருவாகக்கூடிய அமைப்பு. வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணையை எடுத்துக் கொள்வது மேன்மையைத் தரும். பிறருக்காக ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோயில் திருப்பணிகள், மத திருப்பணிகள், தெய்வ காரிய அனுகூலங்கள், சுப காரிய அமைப்புகள் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். 6 ஆம் இடத்தில் கேது இருப்பதால் தேவையில்லாத சகவாசங்களால் அவப்பெயரையும், கஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய அமைப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும்,கும்பம்
கவனம்
ஜாக்பாட்
முன்னேற்றம்
சுபகாரியம்